MEDIA STATEMENT

திவால் ஆகும் நிலையில் உள்ள அரசு ஊழியர்களுக்கு சிறப்பு கடனுதவி

49,000 அரசு ஊழியர்கள் திவால் ஆகும் நிலையில் இருப்பதாக வெளியான தகவலின் படி அவர்கள் தங்களின் வங்கி கடன் நிர்வாகத்தை சரியான முறையில் திட்டமிட தவறிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுச் சேவை  ஊழியர் தொழிற்சங்கத்தின்  (கியுபெக்ஸ்) தலைவர் டத்தோ  அஸி மூடாவின் அறிக்கையை மேற்கோள்காட்டி, அரசு ஊழியர்கள் தங்களின் சம்பளத்திற்கு மேல் தனியார் வங்கி கடன் பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலை ஏற்பட முக்கிய காரணம்  அவர்களின் வாழ்க்கை செலவீனங்கள் அதிகரிப்பு போன்ற பல்வேறு வாழ்வாதார சிக்கல்கள்   நிதி நெருக்கடியை உண்டாக்குகிறது. மேலும் பொருட்கள் மற்றும் சேவை வரி  (ஜிஎஸ்டி) நிலைமையை இன்னும் மோசம் அடையச்செய்து விட்டது.

இந்த அடிப்படையில், அரசாங்கம் புதிய வழிமுறையை பின்பற்ற முயல வேண்டும்.  அரசு  ஊழியர்களுக்கு சிறப்பு கடனுதவி  ஏற்படுத்த வேண்டும். திரும்பி செலுத்தும் முறையை போனஸ் மற்றும் ஓய்வூதியத்தை நேரிடையாக வங்கி கணக்கில் சேர்க்கும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

பொருளாதார போக்குகள் மோசமான சூழ்நிலையில் உள்ள நிலையில், மக்கள் வாழ்க்கை செலவீனங்களால் ஏற்படும் பாதிப்புகள் அவர்களை பகுதி நேர வேலை செய்யும் அளவிற்கு தள்ளப் பட்டிருக்கிறார்கள்  என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும்  அரசு ஊழியர்கள்  இரு வேலைகளைச் செய்து குடும்பத்தினரின் வாழ்க்கை செலவீனங்களை எதிர் கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது.

Hasan-Karim

 

 

 

 

 

 

 

 

அரசு  ஊழியர்களில் 49,000 பேர் திவாலாகி விடும் என்ற நிலையில் உள்ளனர்  என்ற விவரத்தை அறியும் போது அரசாங்கம் பொதுச் சேவை ஊழியர்களின் சம்பள திட்டத்தை மறுஆய்வு செய்து தனியார் நிறுவன ஊழியர்களின் தரத்துக்கு சரி செய்ய வேண்டுகிறேன்

 

ஹாசான் கரீம்

ஜொகூர் மாநில கெஅடிலான் தலைவர்


Pengarang :