RENCANA PILIHANSELANGOR

38 ஐபிஆர் திட்டங்கள் மக்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்டது

பெட்டாலிங் ஜெயா, மே 10:

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் 38 திட்டங்கள் மக்களுக்கு உதவி அளித்து மாநில வளங்களை மக்களும் பயனடையும் வகையில் அமைந்துள்ளது என்று மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். 2008 இருந்து பாக்காத்தான் ஆளும் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தில் மேம்பாட்டுக்கும் மற்றும் மக்களின் நலனுக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டன என்று தெரிவித்தார். பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு மக்களை சென்றடைந்ததாக கூறினார்.

”   2008-இல் ஆரம்பமாக ஏழு திட்டங்கள் செயல்படுத்தியது.  இன்று 38 திட்டங்கள்  அமல்படுத்தி மக்களை அடைந்திருக்கிறது. ஆக, தற்போது இந்த திட்டங்களை மக்கள் அக்கறைகொண்ட திட்டம்  (ஐபிஆர்) என்று விரிவாக்கம் செய்துள்ளோம். இந்த திட்டங்களை அமலாக்கம் செய்யும் முயற்சிகளை கண்டு பெருமிதம் கொள்கிறேன். சிலாங்கூர் மக்கள் மாநிலத்தின் வளங்களை பங்கிட உரிமை உண்டு,” என்று கோத்தா டமன்சாரா ஜயன்ட் பேரங்காடியில், கார்னிவல் ஐபிஆர் தொடக்க விழாவில் தெரிவித்தார்.

KARNIVAL IPR 2017 (14)

 

 

 

 

 

மேலும் கூறுகையில், பொறுப்புள்ள மற்றும் நேர்மையான முறையில் செயல்படும் மாநில அரசாங்கம் தொடர்ந்து மாநில வளத்தை அதிகரித்து, பொருளாதார நிலைத்தன்மை வலுப்படுத்தி, மாநில கஜானா ரிம 3.6 பில்லியன்  அடைய வழி வகுத்திருப்பதாக கூறினார்.

இந்த நிகழ்வில், முகமட் அஸ்மின் அலி ஐபிஆர் திட்டங்களின் மூலம் பல்வேறு விதங்களில் உதவி நிதிகள் வழங்கப்பட்டன. அதில் ஹிஜ்ரா(ரிம 2.6 மில்லியன்), ஸ்மார்ட் சிலாங்கூர் ஃபூட் ஸ்தேம்ப்(ரிம 5000), பெடுலி சேஹாட் சுகாதார அட்டை  (ரிம 50,000), பெடுலி சிஸ்வா மற்றும் மரண சகாய நிதி  ஆகியவை மக்களுக்கு வழங்கப்பட்டன.

அவரோடு மாநில ஆட்சிக் குழு  உறுப்பினர்கள் டாக்டர் டரோயா அல்வி, எலிஸபத் வோங், நிக் நஸ்மிநிக் அமாட், அமிருடின் ஷாரி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவராசா, ஹி லோய் சான் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் பெட்டாலிங் ஜெயா மேயர் டத்தோ முகமட் அஸிஸி முகமட் ஸைன் மற்றும் கோத்தா டமன்சாரா ஒருங்கிணைப்பாளர் ரஸ்லான் ஜமாலுதீன் நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தனர்.


Pengarang :