NATIONALRENCANA PILIHAN

போதிக்கும் ஆசிரியர் பணியை திரும்பி ஒப்படைக்க வேண்டும்

ஷா ஆலம், மே 15:

பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி நடப்பு அரசாங்கத்தை, ஆசிரியர்களின் முதன்மை பணியான கற்றல் கற்பித்தலை சிறந்த முறையில் செய்வதற்கு நிர்வாகப் பணிகளை அகற்ற வேண்டும் என ஆசிரியர்கள் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட செய்தியில் பாக்காத்தான் தெரிவித்துள்ளது. நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளும் போது ஆசிரியர்கள் தரமான கல்வியை வழங்கிட முடியாமல் போகிறது. இருந்தாலும் தங்களின் வேலையில்   அர்ப்பணிப்போடு தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

”   பாக்காத்தான், ஆசிரியர்களின் கற்றல் கற்பித்தல் தவிர்த்து மற்ற வேலைகள்  உடனடியாக நிறுத்தப் பட வேண்டும். நிர்வாக பொறுப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்க வழி வகுக்க வேண்டும். இந்த வேலைகள் மற்றவர்கள் செய்ய வேண்டும் என்றும் பணியாளர்கள் அதிகரிக்கவும் மற்றும் துணை ஆசிரியர்களை பணிக்கு அமர்த்தப்பட வலியுறுத்துகிறோம். பாக்காத்தான், ஆசிரியர்களின் முதன்மை பணியான கற்றல் கற்பித்தலை செவ்வென செய்ய வழிவிட வேண்டும்,” என்று வலியுறுத்தியது.

இதனிடையே, ஆசிரியர்கள் ஏறக்குறைய 60 நிர்வாக பொறுப்புகளை செய்து வருகிறார்கள் என்றும் மாணவர்களின் விவரங்கள் இணையதளத்தில் நிரப்புவது மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெறும் புறப்பாட நடவடிக்கைகள் இதில் அடங்கும் என்று தெரிவித்துள்ளது.

பாக்காத்தான் புத்ராஜெயாவை கைப்பற்றும் தருணத்தில் நாட்டின் கல்வி திட்டத்தை மேம்படுத்தும் எனவும்  ஆசிரியர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று  உறுதி அளித்தது. ஆசிரியர்களின் மீது அதிக நம்பிக்கை வைத்து கல்வி அடிப்படை திட்டங்களில் முடிவு எடுப்பதில் முன்னுரிமை வழங்கப்படும் என்று ஆசிரியர் தினத்தைமுன்னிட்டு செய்தியை வெளியிட்டுள்ளது.


Pengarang :