MEDIA STATEMENT

நாம் மக்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்

மலேசிய அனைத்துலக வெளிப்படையான நிறுவனத்தின் தலைவர் டத்தோ அக்தார் சாத்தார், லஞ்ச ஊழல் நடக்க மூலக் காரணம் நம்பகத்தன்மை இல்லாததால் தான் என்று தெரிவித்தார்.

தேர்தலில் ஊழல் நடவடிக்கையில் ஈடுபடாத வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும் என்ற ஆலோசனையை சிறந்த ஒன்று. வேட்பாளர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் நிதி நிர்வாகம் செய்யும் பதவியில் இருப்பவர்கள் கண்டிப்பாக தங்களின் சொத்துடமைகளை பொது அறிவிப்பு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பபடுகிறது.

பாரிட் புந்தார் நாடாளுமன்ற உறுப்பினரான நானும் எனது சொத்துடமைகளை பொது அறிவிப்பு செய்து விட்டேன். என்னோடு பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் பலர் இதேபோல செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பொது மக்கள் பலர் அரசியல் ஒரு சாக்கடை என்று தவறாக புரிந்து கொண்டுள்ளனர். ஆக இந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ள அரசியல்வாதிகள் தான் முயற்சிகள் எடுக்க வேண்டும்.

அரசியலில் ஈடுபட்டுள்ள அனைத்து நண்பர்களும் பொது மக்களுக்கு ஒரு எடுத்து காட்டாக இருக்கவேண்டும். நல்ல ஒரு மலேசிய குடிமக்களாக விளங்க சிறந்த சிந்தனைகள் கொண்டு இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.

டத்தோ டாக்டர் முஜாஹிட் யூசோப் ராவா

பாரிட் புந்தார் நாடாளுமன்ற உறுப்பினர்


Pengarang :