MEDIA STATEMENT

சிலாங்கூர் மற்றும் பினாங்கு மாநிலங்களின் பிரமாண்ட வெற்றிகள்

சிலாங்கூர் மற்றும் பினாங்கு மாநிலங்களின் நிர்வாகம் 10 ஆண்டுகள் நெருங்கிய வேளையில் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம்மின் மறுமலர்ச்சி கொள்கையின் அடிப்படையில் செயல்பட்டு வருகிறது என்றால் மிகையாகாது. நிர்வாக செயல் திறன், வெளிப்படையான கொள்கைகள் மாநில வளர்ச்சிக்கு வித்திடும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. கடன்கள் குறைக்கப்பட்டு மாநில இருப்பு அதிகரித்துக் கொண்டு சிலாங்கூர்  ரிம 4 பில்லியனும் ரிம 1.7 பில்லியனும் ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மாநிலத்தின் வளம் மக்களுக்கே திரும்பி தரும் திட்டமான ஐபிஆர் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கீழ் உள்ள சிலாங்கூர் மாநில அரசாங்கம் வளமான வாழ்விற்கு வித்திடுகிறது. லிம் குவான் எங் கீழ் செயல்படும் பினாங்கு மாநிலம் ஐ-செஜத்ரா திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

BANGUNAN SUK

 

 

 

 

 

கிளிப்தோகிராட் கூட்டம் நேர்மையான, நீதியான மற்றும் வெளிப்படையாக செயல்படும் தலைவர்களை கண்டு செய்வதறியாது அவதூறுகளை அள்ளி வீசிக் கொண்டும் வீண் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறது.  தற்போது லிம் குவான் எங் ஜோடிக்கப்பட்ட வழக்கு விசாரணை எதிர் நோக்கி உள்ளார். கெஅடிலான் மற்றும் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி ஒருங்கிணைந்து, வீசப்பட்ட அனைத்து அவதூறுகளையும் எதிர்த்து போராடும்.

மறுமலர்ச்சி கொள்கை மற்றும் மக்கள் நீதி ஆகியவை சிலாங்கூர் மற்றும் பினாங்கு மாநில தலைமைத்துவத்திற்கு அடிப்படை ஆகும். சிலாங்கூர் மற்றும் பினாங்கு மாநிலங்களை சிறந்த முறையில் நிர்வகிக்கும் போது கண்டிப்பாக புத்ரா ஜெயாவையும் திறன் மிக்க நிர்வாக செயல்பாடுகள் கொண்டு இறைவன் அருளால் ஆட்சி அமைக்க முடியும்.

டத்தோ ஸ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயில்

மக்கள் நீதி கட்சி யின் தலைவர்


Pengarang :