SELANGOR

மின் உற்பத்தி தொழிலாளி ஒரு டன் எடை கொண்ட முதலையை கண்டு அதிர்ச்சி அடைந்தார்

கிள்ளான், மே 28:

தோக் மூடா கிராமத்தில் அமைந்துள்ள காப்பார் எனர்ஜி வென்செர் (கெஇவி) மின் உற்பத்தி தொழிலாளர்கள் நீர் தேக்க மதகில் ஒரு முதலையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஏறக்குறைய நள்ளிரவு 12 மணிக்கு ஒரு டன் எடை கொண்ட முதலை மின் உற்பத்தி மையத்தின் மதகில் கிடைக்க கண்டு பிடித்ததாக கொஸ்மோ ஓன்லைனில் தெரிவித்துள்ளது.

மூன்று மணி நேரம் முதலையை மேலே கொண்டு வர முயற்சிகள் செய்யப் பட்டுள்ளது. சுங்கை பினாங் தீயணைப்பு மீட்பு படையினர் இரவு 11.45 மணிக்கு தொலைபேசி அழைப்பை பெற்றதாகவும் 14 அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்று நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் கெஇவின் தொழிலாளர்களின் உதவியுடன் முதலையைப் பிடிக்க மின் உற்பத்தி மையத்தின் ஏறக்குறைய விடிகாலை 4 மணி அளவில் போராட்டம் நடந்ததாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

DA43PW0U0AAfAly

 

 

 

 

 

 

 

 

 

 

தீயணைப்பு அதிகாரி ஜைடி தெரிவிக்கையில், முதலை வன விலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டதாக கூறினார்.  இந்த நடவடிக்கை காலை 10 மணிக்கு முடிவடைந்ததாக ஜைடி கூறினார்.

என்எஸ்டி & பெர்னாமாவின் விவரங்கள்


Pengarang :