MEDIA STATEMENT

அனைவரும் ஒன்றிணைந்து மாற்றத்தை ஏற்படுத்துவோம்!

14வது பொதுத் தேர்தல் எந்த நேரத்திலும் நடக்கலாம் என்று எதிர் பார்க்கப் படுகிறது. அம்னோ தேசிய முன்னணியின் தேர்தல் இயந்திரங்கள் உணவு பொருட்களை ஆங்காங்கே விநியோகம் செய்யப்படுவது தேர்தல் வரும் அறிகுறிகளாக அனைவரும் அறிந்ததே. இப்போது நாம் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்ப்பார்ப்பது நஜிப் ரசாக் அவர்களின் நாடாளுமன்றதை கலைக்கும் திகதி மட்டுமே.

கடந்த மே 16-இல் அரசு சார்பற்ற இயக்கமான பெர்சே 2.0 எதிர் வரும் பொதுத் தேர்தல் நீதியாகவும் மற்றும் நேர்மையாகவும் நடத்தப் பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. மலேசிய தேர்தல் ஆணையம் (எஸ்பிஆர்),  வாக்காளர் கூடுதல் வாக்காளர் பட்டியலை (ஆர்டிபிதி) அரசியல் கட்சிகளுக்கு விநியோகத் தடையை நீக்க வேண்டும். அரசியல் கட்சிகளுக்கு புதிய வாக்காளர்களை அடையாளம் காண முடியும் ஒரே வழி ஆர்டிபிதி ஆகும். இதன் மூலம் ஆவி வாக்காளர்கள், முகவரி இல்லாத வாக்காளர், இறந்தவரின் பெயரை பயன்படுத்தும் வாக்காளர் மற்றும் மலேசியர் அல்லாத வாக்காளர் போன்ற பல்வேறு கோளாறுகளை கண்டு பிடிக்கலாம்.

எஸ்பிஆர் வெளியிட்ட அறிக்கையில் ஏறக்குறைய 4 மில்லியன் தகுதி பெற்ற இளையோர் வாக்காளர்களாக பதிவு பெறாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது. மக்களாட்சி முறையின் கீழ் செயல்படும் மலேசியா நாட்டின் தோற்றத்தில், இது ஒரு பெரிய பாதிப்பாக கருதப்படுகிறது. குறைந்த கல்வி அறிவு மற்றும் அரசியல் விழிப்புணர்வு இல்லாமல் மலேசியர்கள் இருப்பது நாட்டின் மாற்றம் ஏற்படுவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

தேர்தலில் வாக்குகளின் முக்கியத்துவம் என்ன?

பொது மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது தங்களின் மக்கள் பிரதிநிதிகளையும் மற்றும் நாட்டை நிர்வகிக்கும் அரசாங்கத்தை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்கே உண்டு. அரசாங்கமே நாட்டின் சட்டம், பொருளாதாரம், வாழ்க்கை செலவீனங்கள், கல்வி மற்றும் பாதுகாப்பு போன்ற பல்வேறு அரசியல் முடிவு செய்கிறார்கள்.

ஆனால் இன்று, இளையோர்கள் பலர் வேலையின்மையினால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். வெளிநாட்டு தொழிலாளர் வருகையால் வேலை வாய்ப்புகள் பறிப்பதாக பெற்றோர்கள் குறைகூறி வருகிறது என்றால் மிகையாகாது.

இன்றைய பொது மக்கள் பிரச்சனைகள் அம்னோ தேசிய முன்னணி அரசாங்கத்தின் கொள்கைகளால் ஏற்பட்டவை ஆகும். அரசியல்வாதிகளால் உருவாக்கப்பட்ட கொள்கைகள் எந்த நிபுணத்துவமும் இன்றி செய்யப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆகவே நாம் இந்த பொதுத் தேர்தலில் எதுவும் செய்யாமல் இருந்தால், மீண்டும் அநியாய அராஜக அம்னோ தேசிய முன்னணி ஆட்சி தொடரும்.

வெளியே இருக்கும் பொது மக்கள் அனைவரும், வாருங்கள் வாக்காளர்களாக பதிந்து கொண்டு பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி உடன் சேர்ந்து அராஜக அரசான அம்னோ தேசிய முன்னணியை மாற்றுவோம். ஒரு புதிய தோற்றத்தில் ஆன மலேசியாவை பழையனவற்றை தூக்கி எறிந்து உருவாக்குவோம்.

புதிய வாக்காளர்களாக பதிவு செய்வோம்.. மாற்றத்தை ஏற்படுத்துவோம்

* சாங் லீ காங்

தேஜா சட்ட மன்ற உறுப்பினர்

கெஅடிலான் கட்சியின் தேசிய இளைஞர் பிரிவு செயலாளர்


Pengarang :