NATIONAL

மியான்மர் ராணுவ விமான விபத்து, மலேசியா இரங்கல் தெரிவித்தது

கோலா லம்பூர் ஜூன் 10:

மலேசியா கடந்த ஜூன் 7-இல் நடந்த மியான்மர் நாட்டின் ராணுவ விமானம் விபத்திற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறது. ராணுவ விமானம் தனிந்தார்யி மாகாணத்தின் அருகாமையில் அந்தமான் கடலில் விழுந்தது குறிப்பிடத்தக்கது.

”   மியான்மர் அரசாங்கத்திற்கும் மற்றும் மியான்மர் நாட்டு மக்களுக்கும் குறிப்பாக விமான விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினர் அனைவருக்கும் மலேசியா அரசாங்கம் வருத்தத்தையும் மற்றும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த சூழ்நிலையை சம்பந்தப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் தைரியமாக இருந்து எதிர் கொள்ள வேண்டும்,” என்று விஸ்மா புத்ராவின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்தது.

மியிக் நகரில் இருந்து யாங்கூன் நகரை நோக்கி பயணம் மேற்கொண்ட வேளையில் அந்தமான் கடலில் 122 பயணிகளோடு விழுந்தது குறிப்பிடத்தக்கது. இதுவரை 30 பயணிகளின் சடலங்களை மீட்புப் படையினர் கண்டு பிடித்து விட்டது என்று விவரித்தது.

தகவல்: பெர்னாமா செய்தி


Pengarang :