Malaysia menyasarkan kemasukan 30 juta pelancong tahun ini. Foto arkib SELANGORKINI
MEDIA STATEMENTTOURISM

சுற்றுலா வரி மக்களுக்கு பெரும் சுமை

நாட்டின் சுற்றுலா,பண்பாடு துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் நஸ்ரி அப்துல் அசிஸ் வரும் ஜூலை மாதம் தொடங்கி நாட்டில் சுற்றுலா வரி வசூல் செய்யப்படும் என அறிவித்திருப்பது நாட்டு மக்களுக்கு பெரும் சுமையாக அமைவதோடு நாட்டின் போட்டித்தன்மையையும் அதன் திறன் மிக்க ஆற்றலையும் பின்னோக்கிய சூழலுக்கு கொண்டு செல்லும் என தேஜா சட்டமன்ற உறுப்பினர்  சாங் லீ காங்   குறிப்பிட்டார்.

உள்நாட்டில் சுற்றுலாவை மேற்கொள்பவர்கள் ஹோட்டலில் தங்கும் ஒவ்வொரு நாளுக்கும் வெ.2.50 முதல் வெ.20 வரை வரி வசூல் செய்யப்படுவது  மக்கள் மீது திணிக்கப்பட்ட மற்றுமொரு சுமை எனவும் அவர் வர்ணித்தார்.

சுற்றுலா வரியை சுற்றுலா நோக்கம் இல்லாத வணிக ரீதியிலும் ஹாட்டலில் தங்குபவர்களும் அந்த வரியை செலுத்த வேண்டிய சூழல் ஏற்படுவதையும் சுட்டிக்காண்பித்த அவர் இந்த சுற்றுலா வரி என்பது இன்றைய நாட்டின் பொருளாதார சூழலுக்கு மக்களுக்கு மாபெரும் சுமை என்றால் அஃது மறுப்பதற்கில்லை என்றார்.

நாட்டில் ஏற்கனவே ஜிஎஸ்டி வரி மக்களை நெரிக்கிக் கொண்டிருக்கும் சூழலில் அவர்களுக்கு மற்றுமொரு சுமையாய் சுற்றுலா வரியையும் விதித்திருப்பது தேசிய முன்னணி அரசாங்கத்தின் மக்கள் மீது அவர்களின் அக்கறையின்மையை நன்கு புலப்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.

நாட்டில் மக்கள் வருமானம் நிறைவான நிலையில் இல்லாத வேளையில் பொருளாதார நிலையும் பெரும் மந்தமாய் இருக்கின்ற வேளையில் வரி,வரி என மக்களை பெரும் அவதிக்குள்ளாக்குவது வேதனையானது என்றும் அவர் கூறினார்.

அதேவேளையில்,நாட்டின் சுற்றுலா துறை நடப்பியல் நிலையில் தான் துரிதமான இலக்கை நோக்கி பயணிக்க தொடங்கியுள்ளது.இம்மாதிரியான நேரத்தில் விவேகமற்ற நிலை வரி விதிப்பது நாட்டின் சுற்றுலா துறைக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்துவதோடு அஃது பெரியதொரு பின்னடைவினையும் ஏற்படுத்தும் என நினைவுறுத்தினார்.

அதேவேளையில்,வெளிநாட்டு சுற்றுப்பயணிகளுக்கு வரி விதிப்பது ஏற்புடையதாக இருந்தாலும் உள்ளூர்வாசிகளுக்கு வரி விதிப்பது அர்த்தமற்றது.சொந்த நாட்டில் சுற்றுலாவிற்கு செல்லும் மலேசியர்கள் சொந்த கூடாரம் அமைத்தா தங்க முடியும் எனவும் கேள்வி எழுப்பினார்.

நாட்டில் ஹாட்டல் துறை அவ்வளவு பெரியதொரு இலக்கோடு முன்னேறவில்லை என்பதையும் சுட்டிக்காண்பித்த அவர் ஹாட்டல்களில் வரி விதிக்கப்பட்டால் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை சரிவதோடு அஃது ஹாட்டல் வருமானத்தையும் பெரும் அளவில் பாதிக்கும் என்றும் தெளிவுப்படுத்தினார்.

மேலும்,இந்த சுற்றுலா வரியினால் வெளிநாட்டு சுற்றுப்பயணிகளும் ஹாட்டல்களில் தங்குவதை தவிர்க்க முற்படுவதோடு அவர்கள் நாட்டில் அதிகமாய் செலவிடுவதையும் அவர்கள் தவிர்ப்பார்கள் என்றும் அவர் சுட்டிக்காண்பித்தார்.இன்றைய சூழலில் சுற்றுலா வரி என்பது நாட்டுக்கும் மக்களும் பெரும் சுமை என்று நினைவுறுத்தினார்.

 

 

 

 

 

 

 


Pengarang :