ANTARABANGSA

உலக அளவில் பிரசித்தி பெற்ற இறைச்சி நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் வாங்கியதாக பிரேசில் அதிபர் மீது குற்றச்சாட்டு?

பிரேசிலியா, ஜூன் 28:

பிரேசில் நாட்டின் அதிபர், மைக்கேல் தேமர் மீது மத்திய அரசு வழக்கறிஞர்கள் பல மில்லியன் டாலர் லஞ்ச ஊழல் முறைகேடுகள் சம்பந்தப்பட்டதாக குற்றம் சாட்டினர். மைக்கேல் AS $11.5 மில்லியன்  (ரிம 49.3 மில்லியன்) லஞ்சமாக பெற்று வரிகளை சரி செய்யவும், அரசாங்க வங்கியில் கடன் அனுமதி வழங்கியுள்ளதாகவும் மற்றும் சில குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கிறார். ஜெபிஎஸ் எஸ்ஐசி என்ற உலக பிரசித்திபெற்ற நிறுவனம் மேற்கண்ட செயல்களுக்கு, அடுத்த ஒன்பது மாதங்களுக்கு இந்த தொகையை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, பிரேசில் அதிபர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு அவரின் ஆட்சிக்கு ஏற்பட்ட பெரும் சவாலாகவே இருக்கும் நிலையில் வத்தின் அமெரிக்காவின் பெரிய நாட்டின் அரசியல் நிலைத்தன்மையை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மைக்கேல் தேமர் முழுமையாக மறுத்தார். பிரேசில் நாட்டின் சட்டப்படி, காங்கிரஸ் அவையில் தாக்கல் செய்து அனுமதி வழங்கிய பிறகு சிறப்பு விசாரணை ஆணையம் அமைத்து மைக்கேல் தேமரை விசாரிக்கப் படுவார். மைக்கேல் தேமர் இதற்கு முன்பு நீக்கப்பட்ட டில்மா ராவ்செப்ஃக்கு பதில் தேர்வு செய்யப் பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது – ஏஜென்சி

#கேஜிஎஸ்


Pengarang :