RENCANA PILIHANSELANGOR

மெமோசெல்: 30,456 மகளிர் பயன் பெற்றனர்

ஷா ஆலம், ஜூன் 28:

சிலாங்கூர் மாநில இலவச மெமோகிரம் பரிசோதனை திட்டத்தில் (மெமோசெல்) இது வரையில் 30,465 35 வயதுக்கு மேற்பட்ட மகளிர் பயன் பெற்றனர். புள்ளி விவரங்கள் படி பரிவுமிக்க மக்கள்நல செயல்பாடுகள் (ஐபிஆர்) திட்டத்தின் கீழ் மெமோசெல் இதுவரை ரிம 3.4 மில்லியனை மாநில அரசாங்கம் செலவிட்டுள்ளது.

சிலாங்கூர் மகளிர் சுகாதார திட்டத்தை மாநில அரசாங்கம் அறிமுகம் செய்தது மாநில மேம்பாட்டில் மகளிர் பங்களிப்பு முக்கியத்துவம் கொடுத்துள்ளதை காட்டுகிறது.

daroyah-kesihatan

 

 

 

 

 

 

மெமோசெல் திட்டம் நவம்பர் 6, 2010-இல் அறிமுகப்படுத்தி இலவச பரிசோதனை மாநில அளவில் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இத்திட்டம் கடந்த 2016-இல் மேம்படுத்தப்பட்டு, மருத்துவர் ஆலோசனை மூலம் அல்ட்ரா சவுண்ட் தொடர் சிகிச்சை மேற்கொள்ள வழி வகுத்தது. இத்திட்டத்தில் பங்கு கொள்ள அருகில் உள்ள சட்ட மன்ற சேவை மையங்களில் பதிவு செய்து கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.

#கேஜிஎஸ்


Pengarang :