Malaysia menyasarkan kemasukan 30 juta pelancong tahun ini. Foto arkib SELANGORKINI
NATIONAL

கெஅடிலான்,நடப்பில் உள்ள சுற்றுலா வரியை எதிர்க்கும்

எதிர் வரும் பொதுத் தேர்தலில் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி வெற்றி பெற்றதும் சுற்றுலா வரியை நீக்கப்படும் என்ற பரிந்துரையை கெஅடிலான் செய்யும் என்று அதன் தலைவர் டத்தோ ஸ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயில் கூறினார். தங்கும் விடுதி உரிமையாளர்கள், பொது மக்கள் மற்றும் சரவாக் கெஅடிலான் தலைவர்கள் ஆகியோரின் கருத்துகள் அடிப்படையில் இந்த முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

பின்வருவது அவரின் முழுமையான அறிக்கை:

டத்தோ ஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயிலின் ஊடக அறிக்கை 

2017 சுற்றுலா வரி சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் மிக அவசரமாக ஏப்ரல் 6-இல், விடிகாலை 4.57-க்கு வாக்களிப்புக்கு வெற்றிகரமாக நிறைவேற்றப் பட்டது. இந்த சட்ட மசோதா, பொது மக்கள் மீது அக்கறை கொண்ட ஒரு தோற்றத்தை ஏற்படுத்தவில்லை.

சட்ட மசோதா நிறைவேற்றம் அடைந்த நிலையில் திடீரென அமலாக்கத்தை நிறுத்திய சுற்றுலா அமைச்சர், டத்தோ ஸ்ரீ நஸ்ரி அஸிஸ் அவர்களின் நடவடிக்கை மத்திய அரசாங்கத்தின் நிலையில்லாத கொள்கை கொண்டதை காட்டுகிறது.

தேசிய முன்னணி சரவாக் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்ட மசோதாவை நிறைவேற்றிய பொழுது அமைதி காத்து, இன்று சுற்றுலா வரியை எதிர்க்கும் நிலை ஏற்பட்டது ஏன்?

wan-azizah

 

 

 

 

புத்ராஜெயாவின் சமீப நடவடிக்கை, சரவாக் மாநிலம் மலேசியா சுற்றுலா வாரியத்திலிருந்து வெளியேறச் சென்றதால் ஏற்பட்டது என்று விவரித்தார்.

எதிர் வரும் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் தலைவர்கள் கூட்டத்தில், 14வது பொதுத் தேர்தலில் பாக்காத்தான் வெற்றி பெற்றால், சுற்றுலா வரியை நீக்கப்படும் பரிந்துரையை தாம் செய்யப் போவதாக அறிவித்தார்.

இதனிடையே, சுற்றுலா துறையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதி கூறினார். புதிய சுற்றுலா சட்ட மசோதா, பொது மக்கள் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்க இயற்றப்படும்.

 

டத்தோ ஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில்

மலேசிய நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர், கெஅடிலான் தலைவர்

கூச்சிங், சரவாக், ஜூலை 1, 2017

#கேஜிஎஸ்


Pengarang :