NATIONALUncategorized @ta

விமான நிலையங்களில் தமிழ் அறிவிப்பு பலகை வேண்டும்

செப்பாங், ஜூலை 1:

நாட்டின் மிக முக்கிய 3 மொழிகளில் தமிழ் மொழியும் அடங்கும் . இதில் மலாய் மற்றும் சீன மொழிகள் மட்டும் கே.எல்.ஐ.ஏ. விமான நிலையத்தின் அறிவிப்பு பலகைகளில் இடம் பெற்றிருப்பது, தமிழாராகிய நமக்கு பெருத்த ஏமற்றத்தை அளிக்கிறது. விமான நிலையத்தில் அரபு மொழியில் கூட இருப்பது குறித்து பலர் ஏற்கனவே நிறைய கருத்துக்களும் கேள்விகளும் எழுப்ப பட்டுவிட்டது.

இது குறித்து நீலாய் சட்டமன்ற உறுப்பினர் அருள்குமார் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த மலேசிய விமான நிலைய பயணிகள் மற்றும் தகவல் பிரிவு தலைவர் ஹஜார் அவர்கள் விவாரிக்கையில், அமைச்சரவை ஒப்புதல் அளித்தால் தமக்கு தமிழ் அறிவிப்பு பலகை பொருத்துவதில் எந்த வித ஆட்சேபனைகளும் இல்லை என்று பதில் அளித்துள்ளார்.

இது குறித்து அமைச்சரவையில் வீற்றிருக்கும் ஒரே முழு தமிழ் அமைச்சர் டத்தோ சுப்ரமணியம் ,வாய் மூடி இனியும் மவுனமாக இருக்காமல் , உடனடியாக அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானத்தை கொண்டு வந்து ஒப்புதல் வாங்கி, உடனடியாக தமிழ் அறிப்பு பலகையை விமான நிலையத்தில் பொருத்த வேண்டும்.
இது மலேசிய தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.
பெ.சிவக்குமார்
செப்பாங் நகராண்மை கழக உறுப்பினர்.


Pengarang :