SUKANKINI

திஎம் மலேசிய கிண்ணம்: ஈப்போவில் பிகேஎன்எஸ் எப்ஃசி ஏமாற்றம் அடைந்தது

ஈப்போ, ஜூலை 5:

திஎம் மலேசிய கிண்ண கால்பந்து போட்டியில் ‘பி’ குழுவில் பேராக் அரங்கில் நடந்த ஆட்டத்தில் பிகேஎன்எஸ் எப்ஃசி அணி 2-0 என்ற கோல் கணக்கில் பேராக் அணியிடம் தோல்வி அடைந்து ஏமாற்றத்துடன் திரும்பினர்.

சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், குறிப்பாக கோல் காவலர் முகமட் ஸாமீர் செலாமாட் மிக திறன் மிக்க முறையில் கோல் கம்பத்தை தற்காத்துக் கொள்ள முயற்சி செய்தாலும் 70-வது நிமிடத்தில் பேராக் அணி அவரை வீழ்த்தியது. ஆட்டம் துவங்கிய நிமிடத்தில் இருந்து பேராக் தாக்குதல் ஆரம்பித்தது.

எட்டாவது நிமிடத்தில் கில்மார் டா சில்வா மிகச் சிறந்த முறையில் பிகேஎன்எஸ் கோல் கம்பத்தை நோக்கி தாக்குதல் நடத்த முயன்ற போது முகமட் ஸாமீர் செலாமாட் மிக லாவகமாக பந்தை பிடித்தார். பிகேஎன்எஸ் அணி அதற்கு பதிலாக 20-வது நிமிடத்தில் அஸ்மிஸி அஸ்மி மூலம் தாக்குதல் நடத்திய வேளையில் பந்து கோல் கம்பத்தின் மேலே சென்றது.

IMG_20170704_214532

 

 

 

 

 

பிகேஎன்எஸ் அணியின் கோல் காவலர் முகமட் ஸாமீர் செலாமாட் மிக திறன் மிக்க ஆட்டத்தை வெளிப்படுத்தி பேராக் மற்றும் பிகேஎன்எஸ் அணிகளுக்கு இடையிலான மலேசிய கிண்ண ஆட்ட முற்பகுதியில் 0-0 என்ற கோல் கணக்கில் முடித்தார்.

ஆனாலும் பிகேஎன்எஸ் அணியின் கோல் கம்பம் 71-வது நிமிடத்தில் தியாகோ ஜூனியர் மூலம் கோல் புகுத்தி பேராக் அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சேர்த்தார். மீண்டும் 79-வது நிமிடத்தில் பிகேஎன்எஸ் அணியின் கோல் கம்பம் கில்மார் மூலம் கோல் புகுத்தியது.

ஆட்டத்தின் இறுதிப் பகுதியில், பிகேஎன்எஸ் அணி கோல் புகுத்த முயற்சிகள் எடுத்தது குறிப்பிடத்தக்கது. முகமட் கைருல் ரமடான் மூலம் தாக்குதல் நடத்திய வேளையில் தலையினால் முட்டிய பந்து பேராக் தற்காப்பு ஆட்டக்காரர் வெளியாக்கினார். பிகேஎன்எஸ் அணி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் பேராக் அணியிடம் ஈடுகொடுக்க முடியாமல் போனது வருத்தமாக இருக்கிறது.

#கேஜிஎஸ்


Pengarang :