SELANGOR

45 ஸ்ரீ அமான் கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு நிலப்பட்டா

ஷா ஆலம், ஜூலை 12:

30 வருடங்கள் காத்திருந்த பிறகு, ஸ்ரீ அமான் கிராம மக்களின் கனவு நினைவானது. ஸ்ரீ அமான் கிராம மக்களுக்கு நிரந்தர நிலப்பட்டா வழங்கப்பட்டன என்று ஸ்ரீ செர்டாங் சட்ட மன்ற உறுப்பினர் நோர்ஹானிம் இஸ்மாயில் கூறினார்.

இதற்கு முன்பு, 45 கிராமத்து மக்களுக்கும் தற்காலிக குடியிருப்பு அனுமதி வழங்கப்பட்டன. மாநில அரசாங்கம், பெட்டாலிங் மாவட்ட நில அலுவலகம் மூலமாக நிரந்தர நிலப்பட்டா வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

”   இந்த ஆண்டின் நோன்பு பெருநாள் கிராமத்து மக்களுக்கு ஒரு வெற்றித் திருநாள். நிரந்தர நிலப்பட்டா இல்லாமல் பல்வேறு பிரச்சினைகள் எழும் என்று எனக்கு தெரியும்,” நிலப்பட்டா வழங்கப்படும் நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர் கூட்டத்தில் பேசினார்.

மேலும் கூறுகையில், ஏறக்குறைய 200 கிராமத்து மக்கள் நிலப்பட்டாவுக்கு விண்ணப்பம் செய்திருப்பதாக தெரிவித்தார். இருந்தாலும், மற்ற விண்ணப்பதாரர்களுக்கு பரிசீலனை நடைமுறைக்கு பிறகு முடிவு செய்யப் படும் என்றார்.

#கேஜிஎஸ்


Pengarang :