SUKANKINI

எப்ஃஏஎஸ், அடுத்த தடவை அவசரப் பட வேண்டாம்

ஷா ஆலம், ஜூலை 14:

சிலாங்கூர் கால்பந்து அணியின் ரசிகர்கள் கூட்டமைப்பு (காபோங்கான்), சிலாங்கூர் கால்பந்து சங்கத்தின் நடவடிக்கையை கண்டு வியப்பு அடைவதாக அறிவித்துள்ளது. சிலாங்கூர் கால்பந்து சங்கத்தின் தலைவர் டத்தோ ஸ்ரீ சுபாஹான் கமால் சிலாங்கூர் மாநில அரசாங்கத்திடம் ரேட் ஜயன்ஸ் அணிக்கு ரிம 5 மில்லியன் ஒதுக்கீடு செய்யும் படி முறையீடு செய்த நடவடிக்கை ஆச்சரியத்தை ஏற்படுத்தியது என்று காபோங்கான் தலைவர் முகமட் பைஃசால் வாஹிட் தெரிவித்தார்.

சுபாஹான் மற்றும் சிலாங்கூர் கால்பந்து சங்கத்தின் உயர் நிர்வாகிகள் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தை புறக்கணித்த காரணத்தால் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி பதவியை துறந்தார் என்பதை மறந்து விட வேண்டாம் என்று நினைவு படுத்தினார்.

”  டத்தோ ஸ்ரீ சுபாஹான் கமால்,  சிலாங்கூர் கால்பந்து சங்கத்தின் செயற்குழு கூட்டத்தை புறக்கணித்து பாதிக்கும் அதிகமான உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்த நடவடிக்கையை நான் உங்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன். கடந்த ஆண்டில் நடைபெற்ற கூட்டத்தில் டத்தோ சுபாஹான் குரல் கொடுத்து வெளியேறிய பிறகு மற்ற செயற்குழு உறுப்பினர்களும் பின்பற்றிய செயலை எப்படி மறக்க முடியும். நீங்கள் செய்த அவசர நடவடிக்கையினால் இன்று மாநில கால்பந்து அணி சிக்கல்களை எதிர் நோக்கி வருகிறது. அன்றைய கூட்டம் 2017’க்கு திட்டமிட்ட பட்ஜெட் மற்றும் சங்கத்தை மறுசீரமைப்பு செய்யும் கூட்டம் என்று கருதப்படுகிறது,” என்று பைஃசால் கூறினார்.

சுபாஹான் செய்த அவசர நடவடிக்கையினால் சிலாங்கூர் கால்பந்து அணி ஷா ஆலம் அரங்கில் விளையாட வாய்ப்பு இழந்து விட்டது என கூறினார்.

Red Giants

 

 

 

 

 

இதனிடையே, பைஃசால் காபோங்கான் சிலாங்கூர் கால்பந்து சங்கத்தின் முறையீட்டை ஆதரவு அளித்து வரும் வேளையில், அப்படி மாநில அரசாங்கம் நிராகரித்தால் திறந்த மனதுடன் ஏற்றுக் கொள்கிறோம் என்று தெரிவித்தார்.

”   சிலாங்கூர் கால்பந்து சங்கத்தின் தலைவர் தான் பத்து வேலை ஒரே நேரத்தில் செய்யக் கூடியவர் ஆவார். எந்த பிரச்சனைகளையும் தீர்க்க முடியும் என்ற நிலையில் மாநில கால்பந்து அணியை காப்பாற்ற வேண்டும்,” என்று சிலாங்கூர் இன்றுக்கு கூறினார்.

இதற்கு முன்பு, சுபாஹான் சிலாங்கூர் மாநில அரசாங்கம் ரிம 3 மில்லியன் ஒதுக்கீடு செய்யும் படி முறையீடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#கேஜிஎஸ்


Pengarang :