Uncategorized @ta

அஸ்மின் அலி: மூன்று இனத்தின் கண்ணியத்தையும் உயர்த்தும் கடமை என்னுடையது

தஞ்சோங் காராங், அக்டோபர் 7:

மலாய்க்கார  இனத்தின் போராட்ட வாதிகள் என்று கூறிக்கொள்ளும் அரசியல் சுயநலவாதிகள், பை பையாக பணத்தை நிரப்பிக் கொண்டு வெளி நாட்டுக்கு
ஓடுகிறார்கள்.எந்த மலாய்க்காரர்களை அவர்கள் காப்பாற்றி விட்டனர்? தன்னைச் சுற்றியுள்ளவர்களை, குடும்பத்தையும்தான். கம்பத்தில் உள்ள மலாய்க்காரர்கள் சிரமப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களை போல் நான் சிலாங்கூர் மக்களுக்கு துரோகியாக விரும்பவில்லை. சிலாங்கூர் மாநில
மக்கள் என்ற முறையில்மலாய்க்காரர், சீனர்,இந்தியர் ஆகிய மூன்று இனத்தின் கண்ணியத்தையும் உயர்த்தும் கடமை என்னுடையது என்று அஸ்மின் தன்னுடைய
தெளிவான பாதையை எடுத்துக் கூறினார்.

கடந்த வாரம் இந்தியாவிலும் அதற்கு முன் சீனாவிலும் இருந்தமைக்குக்
காரணம் சபாக்  பெர்ணாம், தஞ்சோங் காராங்  மக்கள் பணத்தை எடுத்துக் கொண்டு அங்கே முதலீடு செய்வதற்காக அல்ல. மக்கள் பணத்தின் மூலம் அமெரிக்கா
நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு உதவி  செய்வதாகக் கூறிய, சிலாங்கூர் மாநிலத்தின் அருகில் உள்ள அந்த அரசாங்கம்  நான் கிடையாது.

மக்கள் சிரமப்படுகிறார்கள். நாட்டின் மேம்பாடு அதி பின்னடைவில்
இருக்கிறது. மக்களின் பணத்தை எடுத்துக்கொண்டு அமெரிக்காவில் முதலீடு செய்யும் தலைவர்களும் உண்டு. இவர்கள் அந்நிய நாட்டுக்கு முன் மண்டியிடவும் செய்கின்றனர் என்று சாடினார் அஸ்மின்.

முதலீட்டாளர்கள் சிலாங்கூர் மாநிலத்தைத் தேடிவந்து முதலீடு
செய்கிறார்கள். நாம் அவர்கள் முன் மண்டியிடக் கிடையாது. நமக்கு
கண்ணியமும், நேர்மையும் உண்டு என்றார்  அஸ்மின்.

நேற்று,சாவா செம்பாடானில் உள்ள அல்-முனவரா மசூதியில் நடந்த
மக்கள் கருணைத் திட்டம் மற்றும்  மக்களுடன் நட்புறவு முன்னெடுப்பு
கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில் அவர் இவ்வாறுகூறினார்.

சிலாங்கூரின் மாநிலம் மற்றும் மக்களின்  கண்ணியத்தைத் தொடர்ந்து கட்டிக் காக்கும் வகையில் மாநில அரசாங்கத்தின் மேலாண்மை  இருக்கும். உலகின் பொருளாதாரா ஜாம்பவான்களின் முன் சிலாங்கூர் மக்களை ஒருபோதும் மண்டியிடும் சூழ்நிலைக்குக்  கொண்டு விடாது.

பொறுப்புடைமை, ஒருமைப்பாடு, ஊழலற்ற அரசாங்கம் ஆகிய  நற்கூறுகள் மாநிலத்தின் கொள்கைகளாகும். மேம்பாடடைந்த சிலாங்கூர் மாநிலத்தில் முதலீடு
செய்ய வரும் முதலீட்டாளர்களைக்   கவரும் ஈர்ப்புச் சக்தியாக
இக்கொள்கைகள் இருப்பதாக மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ  முகமட் அஸ்மின் அலி தெரிவித்தார்.

இன்று வெளி  நாட்டுக் காரர்கள் சிலாங்கூர் மாநிலத்தில் பல கோடிகளை முதலீடு செய்கின்றனர்.இது சிலாங்கூர் மக்களுக்குத் தொழில் திறனையும் அதிக வருமானத்தை ஈட்டித் தரும்  வேலைவாய்புகளையும்  ஏற்படுத்திக் கொடுக்கிறது என்று அஸ்மின் தெரிவித்தார்.

#சரவணன்


Pengarang :