Uncategorized @ta

சட்ட விரோதமாக குப்பை வீசுவதைத் தடுக்க எம்பிகே மரம் நடும் நடவடிக்கை !!!

கிள்ளான், அக்டோபர் 23:

கிள்ளான் நகராண்மை கழகம் (எம்பிகே) 166 இகேனியா வகை மரங்களை நடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்த முயற்சி,  அரச நகரான கிள்ளானில் சட்ட விரோதமாக குப்பை வீசும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த முடியும் என்று கிள்ளான் நகராண்மை கழகத்தின் தலைவர் டத்தோ யாஸிட் பிடின் தெரிவித்தார்.

இந்த அரிய முயற்சியில் டாரூல் ஏசான் குழும நிறுவனம் மற்றும் மக்கள் நடவடிக்கை குழு ஆகியவை கிள்ளான் நகராண்மை கழகத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது என்றார். மரங்களை நடுவதன் மூலம் சட்ட விரோதமாக குப்பை வீசப் படுவதை தவிர்க்க முடியும் என்று விவரித்தார்.

 

 

 

 

 

பொது மக்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு கொஞ்சம் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் சட்ட விரோதமாககுப்பை வீசும் நடவடிக்கைகளை ஊராட்சி மன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

#கெஜிஎஸ்


Pengarang :