SELANGORUncategorized @ta

போதும் நோ ஓமார், வேறு பிரச்சனையில் கவனம் செலுத்துங்கள்

ஷா ஆலம், அக்டோபர் 25:

டான்ஸ்ரீ நோ ஓமார் தெனாகா நேசினல் கீழ் இருக்கும் குடியிருப்புகள் பற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில் உண்மையில்லை என்று பாயா ஜெராஸ் சட்ட மன்ற உறுப்பினர் முகமட் கைரூடின் ஓத்மான் தெரிவித்தார். சிலாங்கூர் பொருளாதார நடவடிக்கை மன்றம் (எம்திஇஎஸ்) பேச்சு வார்த்தை மற்றும் இழப்பீடு வழங்கிய பிறகே குடியிருப்புகள் உடைக்க கட்டளை இடப்படும் என்று அறிவித்து உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றார். பாதிக்கப்பட்ட மக்களுடன் தானும் மேற்கண்ட கூட்டத்தில் கலந்து கொண்டதாக விவரித்தார்.

”  எனக்கு நோ ஓமார் ஏன் இந்த விடயத்தில் மூக்கை நுழைத்து கொள்கிறார் என்று தெரியவில்லை. ஏற்கெனவே டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி எம்திஇஎஸ்-க்கு சரியான தீர்வு காண வேண்டும் என்று கட்டளை பிறப்பித்து விட்டார். சிலாங்கூர் மந்திரி பெசாருக்கு நன்றி. பாயா ஜெராஸ் சட்ட மன்ற உறுப்பினரின் கோரிக்கை விடுத்துள்ளதை எப்போதும் உடனுக்குடன் தீர்வு கண்டு விடுவார்,” என்று கூறினார்.

கைரூடின் மேலும் பேசுகையில், வீடமைப்பு, ஊராட்சித்துறை மற்றும் நகர நல்வாழ்வு அமைச்சரான நோ மக்கள் பிரச்சினைகளை தீர்க்க முயற்சி எடுக்க வேண்டும். தேவையில்லாத விடயத்தில் மூக்கை நுழைத்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று நினைவுறித்தினார்.

#கெஜிஎஸ்


Pengarang :