Uncategorized @ta

எங்களை பின்பற்றுவதை விட, புத்ரா ஜெயாவை எங்களிடம் ஒப்படையுங்கள்

ஷா ஆலாம்,அக் 30:

மாநில அரசாங்கத்தின் நிர்வாகத்தையும் அதன் செயல்பாடுகளையும் பின் பற்றி அதுபோலவே செய்ய முற்படுவதை விட புத்ரா ஜெயாவை எங்களிடமே ஒப்படையும் சிறந்த முறையில் நிர்வாகம் செய்து காட்டுகிறோம் என சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி மத்திய அரசிற்கு நினைவுறுத்தினார்.
அடுத்தாண்டுக்கான பட்ஜெட்டில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் அறிவித்தவைகளில் பலவற்றை சிலாங்கூர் மாநில அரசாங்கம் மாநில ரீதியில் மேற்கொண்டு விட்டது என்பதையும் அவர் நினைவுறுத்தினார்.

சிலாங்கூரில் மாநில ரீதியில் நாங்கள் மேற்கொண்டதில் சிலவற்றை மத்திய அரசாங்கம் பட்ஜெட்டில் குறிப்பிட்டிருபது சிலாங்கூர் மாநில அரசாங்கம் மக்களுக்கான சரியான அரசாங்கமாய் செயல்படுவதை அஃது உறுதி செய்வதாக கூறிய மந்திரி பெசார் எங்களின் திட்டங்களையும் செயல்பாடுகளையும் மற்றும் வியூகங்களை பின்பற்றுவது அல்லது காஃப்பி அடிப்பதை காட்டிலும் புத்ரா ஜெயாவை நாங்களே நிர்வாகம் செய்வதுதான் சிறப்பு என்றும் கூறினார்.

இதற்கிடையில்,நாட்டின் நிர்வாக செயல்பாட்டிற்கு 84 விழுகாடும் மேம்பாட்டிற்கு 16 விழுகாடும் பட்ஜெட்டில் ஒதுக்கியிருப்பது எவ்வகையிலும் நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்காது என்றும் அஸ்மின் அலி எச்சரித்தார்.
இருப்பினும்,மேம்பாட்டிற்கு 16 விழுகாடு ஒதுக்கினாலும் “பெர்மாத்தா” மூலம் 6 மில்லியன் கிடைத்தால் பிரதமர் துறை கூடுதல் நிதியாக வெ.1.5 பில்லியம் ஒதுக்கினால் ஒருவேளை மக்களையும் பொருளாதாரத்தையும் காக்க முடியும் என்றார்.

2017ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் 18 விழுகாடாக இருந்த மேம்பாடு ஒதுக்கீடு அடுத்தாண்டு 16 விழுகாடாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

#ரௌத்திரன்


Pengarang :