SELANGORUncategorized @ta

மக்களின் நலனுக்காக பிபிஆர் வீடுகளை பராமரிக்க வேண்டும்

ஷா ஆலம், நவம்பர் 7:

சிலாங்கூர் மாநில அரசாங்கம் மக்கள் வீடமைப்பு திட்டத்தை (பிபிஆர்) நிர்வகித்தும் மற்றும் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு வருகிறது என்று மாநில வீடமைப்பு, கட்டிட நிர்வாகம் மற்றும் நகர நல்வாழ்வு ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ இஸ்கண்டர் அப்துல் சமாட் கூறினார்.

”  பிபிஆர் வீடுகளை பராமரிக்க எந்த ஒரு நடைமுறையும் இல்லை என்றும் மாநில அரசாங்கம் அல்லது மத்திய அரசாங்கத்தின் கீழ் வைத்திருப்பதை பற்றியும் எங்கும் குறிப்பிடவில்லை. மாநில அரசாங்கம், மக்களின் நலன் காக்கும் நோக்கில் லெம்பா சுபாங் மற்றும் தாமான் தாசேக் தெராத்தாய் பிபிஆர் வீடுகளை பராமரித்து வருகிறது. இந்த வீடமைப்பு திட்டங்கள் மத்திய அரசாங்கத்தின் நில ஆணையத்தின் கீழ் உள்ளது என்றாலும் மக்கள் நலன் கருதி மாநில அரசாங்கம் பொறுப்பேற்கும். இந்த வீடமைப்பு திட்டங்களை மத்திய அரசாங்கம் மாநில அரசாங்கத்திற்கு ஒப்படைத்து விட்டது. ஆனாலும் வாடகை வசூல் 45%-த்துக்கு குறைவாக உள்ளது என்றாலும், மாநில அரசாங்கம் மேற்கொண்டு வரும் பராமரிப்பு செலவை ஏற்றுக் கொண்டு வருகிறது,” என்று கோத்தா டமன்சாரா சட்ட மன்ற உறுப்பினர் டத்தோ ஹாலிமாத்தோன் சாடியா போஹான் கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் சிலாங்கூர் மாநில சட்ட மன்றத்தில் பேசினார்.

மாநில அரசாங்கம், பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றத்தின்  (எம்பிபிஜே) வழி லெம்பா சுபாங் பிபிஆர் வீடுகளை பராமரிக்க ரிம 60 மில்லியன் செலவிட்டுள்ளது என்று விவரித்தார்.

#வீரத் தமிழன்


Pengarang :