NATIONAL

காற்றின் வேகம் மணிக்கு 60 கி.மீட்டரை கொண்டிருக்கும்

கோலாலம்பூர், டிசம்பர் 20:

கிழக்கு கடற்கரையோரம் இன்று தொடங்கி நாளை வரை காற்றின் வேகம் மணிக்கு 60 கி.மீட்டர் வரையில் இருக்கும் என்று கணிக்கப்படுவதாக மலேசிய வானிலை இலாகா அறிவித்தது. காற்றின் சீற்றம் அதிகமாய் இருக்கும் நிலையில் கடலலையும் 4.5 மீட்டர் உயரத்திற்கு உயரும் என்றும் அஃது அறிவித்தது.அஃது லபுவான் மற்றும் சபா ஆகிய மாநிலங்களிலும் மேற்குக்கறை கடலோரங்களில் அது தொடரும்.

காற்றின் வேகம் அதிகமாய் இருக்கும் இச்சூழலில் அனைத்து கடல் வழி நடவடிக்கைகளும் பெரும் ஆபத்தானது என கூறிய வானிலை இலாகா கடல் நடவடிக்கைகளை தவிர்க்கும் படியும் ஆலோசனை கூறப்பட்டது. அதேவேளையில், கிழக்கு கடற்கரையோரங்களில் காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 60 கி.மீட்டர் தூரம் வரை இருக்கும். குறிப்பாக கிளாந்தான்,திரெங்கானு, பகாங்,ஜோகூர் மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களில் காற்று மையமிட்டிருக்கும் என்றும் அவ்விலாகா கூறியது.

கடல் அலையும் வழக்கத்திற்கு மாறாய் உயர்ந்திருக்கும் நிலையில் மீன் பிடி,பேஃரி போக்குவரத்து,கப்பல் பயணம் உட்பட கடல் நடவடிக்கைகளுக்கு அஃது ஆபத்தினை ஏற்படுத்தும்.
இச்சூழலில் கப்பல் நடவடிக்கைகள் இப்பகுதிகளில் பெரும் ஆபத்தினை எதிர்நோக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.மேலும்,காற்றின் வேகம் குறித்து வானிலை இலாகா வெளியிட்டிருக்கும் முதற்கட்ட அறிக்கையில் அலையின் உயரம் 3.5 மீட்டருக்கு உயரும் என்றும் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சூழல் சிறு ரக படகுகள்,இயந்திர படகுகள் ஆகியவற்று பெரும் ஆபத்தாய் விளங்கிடும் அதேவேளையில் கடல்கரை விளையாட்டுகளுக்கும் ஆபத்தினை விளைவிக்கும்.ஆனால்,இடியும் மின்னலும் இருக்காது என்றும் அந்த இலாகா கூறியது.

#வீரத் தமிழன்


Pengarang :