Uncategorized @ta

மீண்டும் “சர்வாதிகாரி மகாதீர்” என்ற கேள்விக்கு இடமில்லை!!!

ஷா ஆலம், ஜனவரி 8:

டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது பரம எதிரியான துன் டாக்டர் மகாதீர் முகமட்டை பிரதமர் வேட்பாளராக ஒருமித்த கருத்தோடு ஏற்றுக் கொண்டதன் மூலம் முன்பு நடந்த கசப்பான சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது அரசியல் ஆய்வாளர் முகமட் சாயூத்தி ஓமார் கூறினார். எதிர் வரும் 14-வது பொதுத் தேர்தலில் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி புத்ரா ஜெயாவை கைப்பற்ற புதிய தளத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்றார்.

”  டாக்டர் மகாதீர் அன்வார் இப்ராகிமிற்கு நன்றி தெரிவித்ததும் மற்றும் அன்வார் குடும்பங்கள் கடந்த 20 ஆண்டு காலமாக பட்ட துன்பங்களை அனுபவித்து வந்த சூழ்நிலையை விளக்கிய போது பலரும் கண் கலங்கினர். துன் டாக்டர் சித்தி ஹாஸ்மா முகமட் அலியும் கண்ணீர் சிந்திய காட்சி அனைவரின் பார்வையை இழுத்தது. வான் அஸிஸா 1998-இல் நடந்த சம்பவத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் ஒரு தாயினால் மட்டுமே உணர முடியும். நம்மை பொருத்த வரையில், நேற்றைய காட்சி நாட்டில் இரு துருவங்களாக இருந்து வந்தவர்களின் பகைமை முடிவுக்கு வந்தது. அடுத்து புதிய பாதையை நோக்கி அடி எடுத்து வைக்க வேண்டும்,” என்று முகமட் சாயூத்தி  தனது சமூக வலைத் தளத்தில் பதிவு செய்திருந்தார்.

 

 


Pengarang :