NATIONAL

வீடமைப்பு & ஊராட்சித்துறை அமைச்சு: 3 மாதங்களில் வெளிநாட்டினர் பிபிஆர் வீடுகளை காலி செய்ய வேண்டும்?

ஷா ஆலம், ஜூன் 6:

மக்கள் வீடமைப்பு திட்டத்தில் (பிபிஆர்) வெளிநாட்டினர் குடியிருக்கும் வீடுகளை மூன்று மாதங்களில் காலி செய்ய வேண்டும் என்று வீடமைப்பு மற்றும் ஊராட்சித்துறை அமைச்சு கெடு விதித்துள்ளது. கொடுக்கப்பட்ட காலத்தில் வீடுகளை காலி செய்யாவிட்டால் வாடகையாளர்கள் விரட்டப்படும் நிலையில் வீட்டின் உரிமையாளர்கள் மீது அதிக பட்ச நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஸூரைடா கமாரூடின் கூறினார் .

”  மக்கள் வீடமைப்பு திட்டத்தில் உள்ள வீடுகள் மக்களுக்காக கட்டப்பட்டது. ஆகவே, பிபிஆர் வீடுகளை உடனடியாக வெளிநாட்டினர் காலி செய்ய வேண்டும். அப்படி செய்யாவிட்டால், வீடுகள் திரும்பி எடுத்துக் கொள்ளப்படும்,” என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஸூரைடா மேலும் கூறுகையில், இந்த திடீர் அமலாக்க நடவடிக்கை பிபிஆர் வீடுகள் தேவைப்படும் மலேசியர்களுக்கு மட்டுமே, வசதியுடன் வாழும் மக்களுக்கு அல்ல என்று உறுதி கூறினார்.

=EZY=


Pengarang :