Uncategorized @ta

அஸ்மின்:புதிய மலேசியாவின் தோற்றம் நோன்பு பெருநாளுக்கு புத்துயிர் !!!

ஷா ஆலம், ஜூன் 14:

கடந்த ஒரு மாதமாக உருவாகியுள்ள புதிய மலேசியாவின் தோற்றம் மலேசிய மக்களின் ஒருமைப்பாட்டை வளர்க்கும் என்றும் பல்லின மக்களின் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வழிவகுக்கும் என்று பொருளாதார விவகார அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார்.

”  நாம் நேசிக்கும் மலேசியா, கடந்த 60 ஆண்டுகளுக்கு பிறகு புதிய மறுமலர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நாட்டின் பொருளாதார நிர்வாகத்தை வழிநடத்தும் நான் மலேசிய மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு செயல் பட வேண்டும்,” என்று நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் கூறினார்.


Pengarang :