SELANGOR

குழந்தை பராமரிப்பு மையங்களுக்கு வரவு செலவுகளை சரிசெய்தல் வேண்டும் !!

பெட்டாலிங் ஜெயா,ஆக14:

பணியிடங்களில் குழந்தைகள் பராமரிப்பு மையங்களை ஏற்படுத்துவதில் சிக்கல்களை எதிர்நோக்கும் அரசு நிறுவனங்கள் தங்களின் வரவு செலவுகளை சரிசெய்தல் வேண்டும் என மகளிர் குடும்ப மற்றும் சமூக மேம்பாடு அமைச்சின் துணை அமைச்சர் ஹன்னா இயோ தெரிவித்தார்.

அரசு நிறுவனங்களில் குழந்தைகள் பராமரிப்பு மையங்களை அமைப்பதில் பொருளாதார சிக்கல் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.

பொதுவாக போதிய மானியம் இல்லை எனும் அவர்களின் கூற்றை கூர்ந்து கவனிக்கையில்,ஒதுக்கப்படும் மானியம் போதுமானதாக இருக்கும் சூழலில் சம்மதப்பட்ட அரசு நிறுவனங்கள் செலவுகளை நுண்ணியமாக மேற்கொண்டாலே அஃது சிறந்ததாக அமையும் என்றும் அவர் கூறினார்.

பெருநாட்கள் காலங்களில் திறந்த இல்ல உபசரிப்பினை கொண்டாட சாத்தியம் இருக்கும் நிலையில் குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் உருவாக்கவும் அவர்களாள் முடியும் என்றார்.

அதேவேளையில்,அதிகமான குழந்தைகள் பராமரிப்பு மையங்களை நிறுவும் ஆக்கப்பூர்வ நடவடிக்கையினை மேற்கொள்வதற்கும் அரசு நன் நடவடிக்கையினை ஆராய்ந்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.


Pengarang :