RENCANA PILIHANSELANGOR

குடிநீர் தடை நீங்கியது!

ஷா ஆலம், ஜூலை 25-

சுங்கை சிலாங்கூரில் டீசல் கசிவினால் ஏற்பட்ட தூய்மைக்கேடு காரணமாக கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரில் ஏற்பட்ட குடிநீர் விநியோக தடை தற்போது முற்றிலும் சீரடைந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

தூய்மைக்கேடு காரணமாக 4 நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் நடவடிக்கை முடக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட குடிநீர் விநியோக தடையின்போது புரிந்துணர்வோடு ஒத்துழைப்பு நல்கிய அனைத்து பயனீட்டாளர்களுக்கும் தமது தரப்பு நன்றி தெரிவித்துக் கொள்வதாக ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் வாடிக்கையாளர் மற்றும் தொடர்பு பிரிவு தலைவர் அப்துல் ராவோஃப் அகமது கூறினார்.

குடிநீர் விநியோக தடை ஏற்பட்ட கால கட்டத்தில், தமது தரப்பிற்கு பல்வேறு வகையில் உதவி வழங்கிய மாநில அரசாங்கம், தேசிய குடிநீர் சேவை ஆணையம், அரசாங்க நிறுவனங்கள், ஊராட்சி மன்றங்கள், இதர மாநில குடிநீர் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கும் இவ்வேளையில் தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் சொன்னார்.

“குடிநீர் விநியோக தடை காரணமாக ஏற்பட்ட பல்வேறு இடையூறுகளுக்கு நாங்கள் மன்னிப்பு கோருகிறோம். அதே வேளையில், குடிநீரை விரயமாக்காமல் கவனமாகப் பயன்படுத்தும்படி அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொள்கிறோம்” என்றார் அவர்.


Pengarang :