PUTRAJAYA, 20 Jun — Perdana Menteri Tun Dr Mahathir Mohamad menjawab pertanyaan wartawan pada Majlis Sambutan Hari Raya Aidilfitri Jabatan Perdana Menteri hari ini. –fotoBERNAMA (2019) HAK CIPTA TERPELIHARA
NATIONALRENCANA PILIHAN

பிரதமர்: மக்கள் விரும்பினால் மீண்டும் ஜிஎஸ்டி அமலுக்கு வரலாம் !!!

கோலாலம்பூர், அக்டோபர் 3:

மக்கள் விரும்பினால் பொருள் மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டிமீண்டும் செயல்படுத்த அரசாங்கம் முயற்சிக்கும் என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார்.

இது நல்லது என்று மக்கள் உணர்ந்தால்நாங்கள் அதனை ஆரய்வோம்இது மக்களின் விருப்பம் என்றால்எஸ்எஸ்டியை (விற்பனை மற்றும் சேவை வரிவிட ஜிஎஸ்டி சிறந்ததா என்பதை நாங்கள் ஆராய்வோம்ப” என்று மலேசிய பொருளாதார ஆய்வுகள் நிறுவனம் (எம்ஐஇஆர்ஜிஎஸ்டி வரி விதிக்க முன்மொழிவு குறித்து கேட்டபோது அவர் இவ்வாறு கூறினார்.

இருப்பினும்அக்டோபர் 11-ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ள 2020-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இதனை உடனடி மாற்றமாக அறிவிக்க முடியாது என்று மகாதீர் கூறினார்.

வரவு செலவு கணக்கில் சற்று கடினம்பின்னர் இருக்கலாம்” என்று அவர் கூறினார்.

ஆறு விழுக்காடு வீதத்துடனான ஜிஎஸ்டி முறை கடந்த 14-வது பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்களித்த பின்னர் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தால் இரத்து செய்யப்பட்டது.

தற்போது எஸ்எஸ்டி வரி அமல் படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Pengarang :