Amirudin Shari berucap pada Majlis Pelancaran Selangor Digital E-Supply Chain (SELDEC) Ruang Foyer Bangunan Sultan Salahuddin Abd Aziz Shah, Shah Alam. 3 Oktober 2019. Foto REMY ARIFIN/SELANGORKINI
NATIONALRENCANA PILIHANSELANGOR

அடுத்தாண்டு மார்ச் மாதம் அமலுக்கு வரும் புதிய இலவச குடிநீர் திட்டத்தின் மூலம் 50% செலவினம் குறையும்

ஷா ஆலம், அக்.3-

2020 மார்ச் முதல் நாள் அமலுக்கு வரும் புதிய இலவச குடிநீர் திட்டத்தின் மூலம் மாநில அரசு 50 விழுக்காடு செலவினத்தை சேமிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த புதிய திட்டத்தின் உண்மையாகவே தகுதி பெற்றவர்களுக்கு மட்டும் இலவச குடிநீர் விநியோகிக்கப்படும் என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறினார்.

“இப்போது நடப்பில் உள்ள இலவச குடிநீர் திட்டத்திற்காக 200 மில்லியன் வெள்ளி செலவிடப்படுகிறது. ஆயினும் அடுத்தாண்டு மார்ச் முதல் தேதி அம்ல்படுத்தப்படவிருக்கும் புதிய இலவச குடிநீர் திட்டத்திற்காக 100 மில்லியன் வெள்ளி மட்டுமே செலவிட வேண்டும்” என்றார் அவர்.

சுல்தான் சாலாஹுடின் அப்துல் அஸிஸ் ஷா கட்டடத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்திம் அமிருடின் இத்தகவலை வெளியிட்டார்.


Pengarang :