NATIONAL

வீடமைப்புகளில் எவரும் குடியேறாது போனால் நாடு பாழடைந்து காணப்படும்!

கோலாலம்பூர், அக்டோபர் 31:

100 பில்லியன் வெள்ளி மதிப்பிலான வீடுகளும் சொத்துடைமைகளும் விற்கப்படாமல் ஓனால், மலேசியா ஒரு பாழடைந்த நாடாகத் தோற்றமளிக்கும் என்று நாடாளுமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது. மேற்கண்ட விவகாரத்திற்கு தீர்வு காண வீட்டுடைமை இயக்கம் உட்பட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. அவற்றின் பயனாக 13.4 பில்லியன் மதிப்பிலான 21,000 வீடுகள் இவ்வாண்டு முதல் அரையாண்டில் விற்கப்பட்டன என்று வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் ஜுரைடா கமாருடின் கூறினார்.

“100 பில்லியன் வெள்ளி மதிப்பிலான வீடுகள் விற்கப்படாமல் இருப்பதை அறிந்தவுடன் நானும் பயந்தேன். நினைத்துப் பாருங்கள், இந்த வீடுகளில் எவரும் குடியேறாமல் போனால், மலேசியா ஒரு பாழடைந்த நாடாக தோற்றமளிக்கும்” என்றார் அவர்.

அதனால்தான் வீட்டுடைமை இயக்கத்தை இவ்வாண்டு இறுதி வரை நீடித்துள்ளோம். 2020ஆம் ஆண்டு வரை இது தொடரப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளையும் பெற்று வருகிறோம். விலையுயர்ந்த வீடுகளை விற்பதற்கு நாம் மேற்கொண்டு வரும் முயற்சி இதுவாகும் என்று வாய்மொழி வழியாக கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தார்.


Pengarang :