KUALA LUMPUR, 30 Okt — Perdana Menteri Tun Dr Mahathir Mohamad menyampaikan ucapan perasmian PNB Corporate Summit 2019 hari ini. –fotoBERNAMA (2019) HAK CIPTA TERPELIHARA KUALA LUMPUR, Oct 30 — Prime Minister Tun Dr Mahathir Mohamad delivering the opening speech of the PNB Corporate Summit 2019 today. –fotoBERNAMA (2019) COPYRIGHTS RESERVED
NATIONALRENCANA PILIHAN

நாடு மறுமலர்ச்சி நோக்கி செல்கிறது! துன் மகாதீர் நம்பிக்கை

கோலாலம்பூர், அக்டோபர் 31:

முந்தைய அரசாங்கத்தால் குழப்பமான நிலையைக் களைவதற்கும் நாட்டிற்கு மீண்டும் புத்தியிர் அளிப்பதற்காக புதிய அரசாங்கம் கூடுதல் நேரம் உழைக்கிறது. அதன் காரணமாக ஒளிமயமான எதிர்காலம் தெளிவாகப் புலப்படுவதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் கூறினார்.

நிலைத்தன்மை மேம்படுத்த, நிதிநிலை நிர்வாகத்தை வலுவூட்ட மற்றும் கார்பிரெட் நிர்வாகத்தை செம்மைபடுத்துவதோடு வெளிப்படத்தன்மையை உறுதி செய்ய அரசாங்கம் முக்கிய மறுமலர்ச்சி கொள்கையை அரசாங்கம் அமல்படுத்தி வருவதாக 2019 பி என்பி உச்சநிலை மாநாட்டில் உரையாற்றுகையில் மகாதீர் வலியுறுத்தினார்.

“ஆயினும், முந்தைய நிர்வாகம் விட்டுச் சென்ற கடன் சுமையை அரசாங்கம் சுமந்து வருகிறது” என்று அவர் சொன்னார்.
“அந்த விவகாரத்தை எதிர்கொள்ள அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், நாட்டின் நிதிநிலையை சரிசெய்வதற்கு அதிக காலம் தேவைப்படுகிறது” என்றார் அவர்.

அரசாங்கம் மாறி ஒன்றரை ஆண்டாகிவிட்ட நிலையில், பல பெரிய ஊழல்களை நாம் அம்பலப்படுத்தும் அதேவேளையில் நாட்டின் நிதி ஆற்றல் எத்தனை வீணடிக்கப்பட்டன என்பது தெரிகிறது. ஆயினும், மறுமலர்ச்சி நோக்கி முன்னேறும் பாதை தெளிவாகப் புலப்படுகிரது என்று துன் மகாதீர் கூறினார்.


Pengarang :