Isu tanah Kampung Baru, Kuala Lumpur yang belum menemui titik nokhtah. Foto BERNAMA
NATIONALRENCANA

122 ஆண்டுகள் கடந்த பின்னரும் கம்போங் பாருவின் மேம்பாடு இன்னும் கேள்விகுறியே!

கோலாலம்பூர், நவ.8-

கூட்டரசு பிரதேச அமைச்சர் காலீட் அப்துல் சமாட் கம்போங் பாரு உரிமையாளர்கள் மற்றும் வாரிசுகளுக்கு புதிய சலுகை விலையை அறிவித்த பின்னர் கலவையான பதில்கள் பொது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கம்போங் பாரூ நிலங்களை வாங்குவதற்கு ஒரு சதுர அடிக்கு1,000 ரிங்கிட் வழங்க அரசாங்கம் முன் வந்ததைத் தொடர்ந்து பலரின் முகத்தில் மகிழ்ச்சி பரவியது. முன்னர் இந்நிலங்களுக்கு சதுரடி ஒன்றுக்கு 850 ரிங்கிட் வழங்க அரசு முன்வந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அதேவேளையில், ஒரு சிலரிடையே அச்சமும் குழப்பமும் தோன்றியுள்ளது. கோலாலம்பூருக்கு மத்தியில் இருக்கும் நிலங்களை விற்க சில நில உரிமையாளர்களும் வாரிசு தாரர்களும் மறுத்துள்ளனர். இதன் மேம்பாடு தங்கள் பாரம்பரியத்தை பின்பற்றி இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

கம்போங் பாருவை உருமாற்றும் திட்டம் வெற்றி பெறுமா இல்லையா என்பதை சுமார் 3,00 உரிமையாளர்கள் மற்றும் வாரிசுதாரர்கள் வரும் நவம்பர் மாத இறுதியில் தெரிவிக்கும் பதிலை பொறுத்தே தெரிய வரும்.


Pengarang :