NATIONALRENCANA PILIHAN

திறந்த வெளியில் மது அருந்துவதை தடை செய்ய சட்டம் இயற்றப்பட வேண்டும்

கோலா லம்பூர், நவம்பர் 26:

அரசாங்கம் மற்றும் ஊராட்சி மன்றங்கள் இணைந்து திறந்த வெளியில் மது அருந்துவதை தடை செய்யும் புதிய சட்ட மசோதாவை இயற்ற வேண்டும் என்று மலேசிய இஸ்லாமியப் பயனீட்டாளர் சங்கத்தின் சமூக ஆர்வலர் டத்தோ நஸ்ஸீம் ஜோஹான் வலியுறுத்தி உள்ளார். இந்த சட்ட மசோதா அதிகரித்து வரும் பல்வேறு சமூக சிக்கல்களை எதிர் கொள்ள வழி வகுக்கும் என்றார்.

” நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வர வேண்டும். அதேபோல் ஊராட்சி மன்றங்கள் அமலாக்க நடவடிக்கைகளை சற்று இறுக்கமாக செயல் படுத்த முனைப்பு காட்ட வேண்டும். மது அருந்துவது பல்வேறு சமூக சீர்கேடுகளை உருவாக்கி உள்ளது. குறிப்பாக, குடிகாரர்கள் அக்கம்பக்கத்தில் உள்ள மக்களுடன் தகராறு மற்றும் மது போதையில் வாகனங்களை செலுத்தி விபத்துகளை ஏற்படுத்தி உள்ளனர்.

” நாம் ஆஸ்திரேலியா மற்றும் பிரிட்டன் நாடுகளில் போல மது விற்பனையை அல்லது அருந்துவதை திறந்த வெளியில் தடை செய்ய வேண்டும். அந்த நாடுகளில் மது அருந்துவது கடைகளுக்குள் மட்டுமே. போத்தல்களில் மது அருந்த முடியாது, கண்ணாடி கோப்பையை மட்டுமே மது அருந்த முடியும்,” என்று நஸ்ஸீம் ஜோஹான் கூறினார்.


Pengarang :