Amirudin Shari menandatangani plak simbolik Perasmian Projek Tebatan Banjir berlangsung di Padang Jawa, Klang. Foto ASRI SAPFIE/SELANGORKINI
RENCANA PILIHANSELANGOR

வெள்ளப் பிரச்னைக்கு தீர்வு கண்டது சுங்கை ராசா தடுப்பு திட்டம்!

கிள்ளான், நவ.26-

ஜாலான் சுங்கை ராசா மற்றும் ஜாலான் பாடாங் ஜாவா சந்திப்புகளில் அடிக்கடி ஏற்பட்ட வெள்ளப் பிரச்னைக்கு ஒரு தீர்வு பிறந்தது. 60 மில்லியன் ரிங்கிட் செலவிலான ஆறு தடுப்பு திட்டம் நிறைவுற்றதால் மக்கள் இப்பிரச்னையில் இருந்து இப்போது விடுபட்டுள்ளனர்.

சம்பந்தப்பட்ட சந்திப்பு சாலைகளில் உள்ள கால்வாய் உட்பட ஆறுகளின் தரம் உயர்த்தப்படும் ஐந்தாண்டு திட்டம் நிறைவுற்றதாக மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்தார். இத்தரம் உயர்த்தும் நடவடிக்கையில் 2.08 கிலோமீட்டர் தூரத்திலான் இரட்டை இரு வழி சாலைகளும் அடங்கும் என்றார் அவர்.

ஜாலான் ராசா மற்றும் ஜாலான் பாடாங் ஜாவா சந்திப்புகளின் வெள்ளத் தடுப்பு திட்ட நிறைவு நிகழ்ச்சியில் அமிருடின் மேற்கண்டவாறு பேசினார்.


Pengarang :