Dato’ Seri Amirudin Shari ketika bercakap pada sidang media mengenai isu pencemaran bekalan air di Kolam Tasik Idaman, Dengkil pada 23 Disember 2019. Foto FIKRI YUSOF/SELANGORKINI
SELANGOR

கம்போங் இந்தியன் செட்டில்மெண்ட் 100 மாணவர்களுக்கு பள்ளி உபகரணப் பொருட்கள்

பத்து கேவ்ஸ், டிச. 30-

இன்னும் இரு தினங்களில் 2020 ஆம் ஆண்டுக்கான பள்ளித் தவணை தொடங்கவிருக்கும் வேளையில் சுங்கை துவா சட்டமன்ற உறுப்பினருமான மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி பத்து கேவ்ஸ், கம்போங் இந்தியன் செட்டில்மெண்டைச் சேர்ந்த சுமார் 100 மாணவர்களுக்கு பள்ளி உபகரணப் பொருட்களை வழங்கினார்.

இதைத் தவிர்த்து, மாநில அரசாங்கம் பத்து கேவ்ஸ், கம்போங் இந்தியன் செட்டில்மெண்ட் குடியிருப்பாளர்களின் நிலப் பிரச்சினைக்கும் வெற்றிகரமாகத் தீர்வு கண்டுள்ளது.
“நான் பத்து கேவ்ஸ் (தற்போது சுங்கை துவா) சட்டமன்ற உறுப்பினராவதற்கு முன்பே மக்கள் இந்தப் பிரச்சினையை எதிர்நோக்கியிருந்தனர்” என்றார் அவர்.
சிலாங்கூரில் இந்திய சமூகத்தினரின் நலன்களைப் பாதுகாப்பதில் கடப்பாடு கொண்டுள்ள மாநில அரசாங்கம் பல்வேறு திட்டங்களை இச்சாராருக்காக தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.


Pengarang :