Lim Guan Eng pada sidang media selepas pembentangan Belanjawan 2020 di Bangunan Parlimen hari ini. Foto HAFIZ OTHMAN/SELANGORKINI
NATIONAL

நெடுஞ்சாலைகளை கையகப்படுத்தும் நடவடிக்கை தொடர்பில் அடுத்த வாரம் அமைச்சரவை முடிவு செய்யும் !!!

புத்ராஜெயா, டிசம்பர் 30:

பிளஸ் மலேசியா நிறுவனம் மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கில் இயங்கி வரும்  கமூடா நிறுவனம் நிர்வகிக்கும் நான்கு நெடுஞ்சாலைகளை கையகப்படுத்தும் நடவடிக்கை தொடர்பில் அடுத்த வாரம் அமைச்சரவை முடிவு அறிவிக்கும் என நிதியமைச்சர் லிம் குவான் எங் கூறினார். இந்த முடிவை கூடிய விரைவில் எடுக்கவில்லை என்றால் நெடுஞ்சாலை நிறுவனத்திற்கு அதிகமான நஷ்ட ஈடு வழங்க நேரிடும் என்பதனை நினைவு படுத்தினார் அவர்.

” அரசாங்கம் தோல் கட்டணத்தை உயர்வை நிறுத்தி உள்ளது. நஷ்ட ஈடு வழங்க வேண்டும். ஆகவே, அமைச்சரவை உடனடியாக முடிவு எடுக்க வேண்டும். இல்லை என்றால் நஷ்ட ஈடு தொகை அதிகரித்துக் கொண்டே போகும்,” என்று செய்தியாளர்களிடம் பேசிய போது இவ்வாறு குவான் எங் கூறினார்.

பொதுப்பணித்துறை அமைச்சரான பாரூ பியான் அண்மையில் தம்மை பிளஸ் நிறுவனத்தை கையகப்படுத்தும் அறிக்கையை தயார் செய்யும்படி அமைச்சரவை உத்தரவு பிறப்பித்துள்ளது என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

காமூடா நிறுவனத்தின் துணை நிறுவனங்களான ஷா ஆலம் நெடுஞ்சாலை (கெசாஸ்), டமன்சாரா-பூச்சோங் நெடுஞ்சாலை (எல்டிபி), ஸ்பிரிண்ட் நெடுஞ்சாலை மற்றும் ஸ்மார்ட் சுரங்கப்பாதை ஆகியவை கையகப்படுத்தும் நடவடிக்கையில் அடங்கும் என்று குவான் எங் ஏற்கனவே அறிவித்து உள்ளார்.

#பெர்னாமா


Pengarang :