Keadaan trafik di kawasan projek menaik taraf persimpangan FT29/FT31, Sepang pada 3 Mac 2020. Foto ASRI SAPFIE/SELANGORKINI
RENCANA PILIHANSELANGOR

புத்ராஜெயா-சாலாக் செலாத்தான் மாற்று வழி சாலை இம்மாத இறுதியில் திறக்கப்படும்

சிப்பாங், மார்ச் 4-

புத்ராஜெயாவையும் சாலாக் செலாத்தானையும் இணைக்கும் 1.7 கிலோமீட்டர் நீளம் கொண்ட மாற்று வழி சாலை இம்மாத இறுதியில் திறக்கப்பட்டவுடன் டெங்கில் சுற்று வட்டார மக்கள் பல்வேறு வசதி வாய்ப்புகளை அனுப்பவிப்பர் என்று சிலாங்கூர் பொதுப்பணித் துறை இயக்குநர் ஷஹாபுடின் முகமது முகைதின் தெரிவித்தார்.

இந்தக் கட்டுமாணப் பணியின் போது டெங்கிட்- காஜாங் சந்திப்பைக் கடக்கும் 120 மீட்டர் மேம்பாலம் கட்டப்பட்டதோடு சாலை விளக்குகளும் சமிக்ஞை விளக்குகளும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இவற்றுக்காக ரிம. 60.471 மில்லியன் செலவிடப்பட்டுள்ளதாக அவர் சொன்னார். 2017ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி தொடங்கிய இத்திட்டம் நிர்ணயுக்கப்பட்ட காலத்திற்கு முன்னரே நிறைவுற்றதாக அவர் கூறினார்.

சாலைப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதாகவும் மேற்கொள்ளப்பட்ட இத்திட்டம் சுற்று வட்டார பகுதியின் பொருளாதார மேம்பாட்டிற்கும் பங்காற்றும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


Pengarang :