NATIONALRENCANA PILIHAN

மேலும் பல செயற்கைக்கோள் மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்படும்! – பெர்கெசோ

ஜோர்ஜ்டவுன், மார்ச் 4-

செயற்கைக்கோள் மறுவாழ்வு மையங்களின் சேவையை நாடுவோரின் தேவையை நிறைவேற்றும் வகையில் மேலும் பல மையங்களை நாடு முழுவதிலும் திறக்க பெர்கெசோ எனப்படும் சமூக பாதுகாப்பு அமைப்பு திட்டமிடுகிறது. மலாக்காவில் உள்ள துன் அப்துல் ரசாக் மறுவாழ்வு மையத்தின் சேவையை நாடுவோரின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதால், காயமடைந்த தொழிலாளர்களில் பலர் மூன்று மாதம் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று பெர்கேசோ தலைமைச் செயல்முறை அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் முகமது அஸ்மான் அசீஸ் கூறினார்.

விரைவில் கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில், திரெங்கானு, ஜோகூர் மற்றும் சில பேரங்காடிகளிலும் செயற்கைக்கோள் மறுவாழ்வு மையங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக அவர் சொன்னார்.
இதற்கான செலவினங்களுக்கு ஈடாக இவற்றுக்கா வருமானம் இருக்குமா என்ற ஐயப்பாடு சம்பந்தப்பட்டவர்களின் மத்தியில் ஏற்பட்டுள்ளதை தாம் அறிந்துள்ளதாக அவர் சொன்னார்.இந்த அணுகூலங்களைப் பெறுகின்றன தொழிலாளர்கள் சமுதாயத்திற்கு தொடர்ந்து பங்களிப்பர் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக அவர் சொன்னார்.


Pengarang :