PUTRAJAYA, 5 Mac — Ketua Pengarah Pelajaran Dr Habibah Abdul Rahim menunjukkan analisis keputusan Sijil Pelajaran Malaysia (SPM) 2019 selepas sidang media di Kementerian Pendidikan hari ini. –fotoBERNAMA (2020) HAK CIPTA TERPELIHARA
NATIONALRENCANA PILIHAN

2019 எஸ்.பி.எம். அடைவுநிலையில் முன்னேற்றம்

புத்ராஜெயா, மார்ச் 5-

2019ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வு முடிவு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் மேம்பாடு கண்டுள்ளது. 2018ஆம் ஆண்டி தேசிய சராசரி அடைவு நிலை (ஜிபிஎன்) 4..89 என்றிருந்த வேளையில் 2019ஆம் ஆண்டு ஜிபிஎன் 4.86 என்று மேம்பாடு கண்டுள்ளது.

கடந்தாண்டு தேர்வு எழுதிய மாணவர்களில் 8,876 பேர் அல்லது 2.28 விழுக்காட்டு மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் ஏ+ , ஏ- மற்றும் ஏ பெற்றுள்ளனர். அதே வேளையில், 2018ஆம் ஆண்டில் 8,436 பேர் அல்லது 2.15 விழுக்காட்டு மாணவர்கள் மட்டுமே அனைத்து பாடங்களிலும் ஏ பெற்றனர் என்று கல்வி துறை தலைமை இயக்குநர் டாஜ்டர் ஹாபிபா அப்துல் ரஹிம் தெரிவித்தார்.

2019ஆம் ஆண்டு எஸ்.பி.எம். மாணவர்களில் 86.72 விழுக்காட்டினர் முழு சான்றிதழ் பெறத் தகுதி பெற்றனர். இது முந்தைய ஆண்டில் 86.39 விழுக்காட்டுடன் ஒப்பிடுகையில் 0.33 விழுக்காடு அதிகமாகும் என்று அவர் சுட்டிக் காட்டினார். தேசிய மொழி மற்றும் வரலாறு உட்பட ஐந்து பாடங்களில் 246,645 மாணவர்கள் கிரேடிட் பெற்றுள்ளனர் என்று 2019ஆம் ஆண்டு எஸ்.பி.எம் தேர்வு முடிவை அறிவித்த போது டாக்டர் ஹாபிபா கூறினார்.


Pengarang :