Dato’ Seri Amirudin Shari pada sidang media selepas majlis menandatangani perjanjian MoU pembangunan projek `Selangor House’ dan `The Court Selangor’ antara Kerajaan Selangor dan Menteri Besar Selangor Pemerbadanan (MBI) serta INADAY Sdn Bhd berlangsung di Bangunan SUK Selangor, Shah Alam pada 5 Mac 2020. Foto ASRI SAPFIE/SELANGORKINI
NATIONALRENCANA PILIHANSELANGOR

‘சிலாங்கூர் இன் எ டே’ திட்டத்தினால் மாநில சுற்றுலா துறைக்கு புதுப் பொலிவு!

ஷா ஆலாம், மார்ச் 5-

தகவல் மையமான ‘சிலாங்கூர் இல்லம் ‘ மற்றும் ‘த கோர்ட்’ ஆடை அலங்கார தங்குமிட மேம்பாடு மாநில சுற்றுலா, வர்த்தக மற்றும் முதலீட்டு தொழிற்துறையில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. ‘சிலாங்கூர் இன் எ டே’ கொள்கை அடிப்படையில் மாநிலத்திற்குச் சொந்தமான வரலாற்றுப்பூர்வ கட்டட தளத்தில் அமையவிருக்கும் இந்த 90 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள திட்டம் கோலாலம்பூர் மாநகர் மன்றம் மற்றும் தேசிய பாரம்பரிய துறை ஆகியவற்றின் ஒப்புதல் பெறப்பட்ட பின்னர் தொடங்கப்படும் என்று மந்திரி பெசார் குறிப்பிட்டார்.

“மலேசியாவிற்கு வருகை புரியும் ஆண்டை ஊக்குவிக்கும் அதே வேளையில் 2021 சிலாங்கூருக்கு வருகை புரியும் ஆண்டை பிரபலப்படுத்தும் வகையில் ‘சிலாங்கூர் இன் எ டே’ திட்டத்தின் முதல் கட்டம் இவ்வாண்டின் மூன்றாவது காலாண்டில் திறக்கப்படும்” என்று இங்கு மாநில அரசாங்க செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
‘சிலாங்கூர் இல்லம் ‘ மற்றும் ‘த கோர்ட்’ ஆடை அலங்கார தங்குமிட மேம்பாட்டு திட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையில் மந்திரி பெசார் அமிருடின் கையெழுத்திட்டார்.


Pengarang :