Hee Loy Sian mendengar penerangan dari Ketua Pengarah JBPM Selangor, Norazam Khamis ketika melawat kawasan Hutan Simpan Kuala Langat Selatan pada 5 Mac 2020. Foto REMY ARIFIN/SELANGORKINI
NATIONALRENCANA PILIHANSELANGOR

பராமரிப்பு காடுகளில் தீ! பொறுப்பற்ற விவசாயிகளே காரணம்- ஹீ லோய் சான்

கோல லங்காட், மார்ச் 8:

தென் கோலா லங்காட் பராமரிப்பு காடுகள் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி தீப்பற்றி எரிந்ததற்கு கழிவு விவசாய பொருட்களை எரித்த விவசாயிகளின் பொறுப்பற்ற செயலே காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.
கடந்த 10 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த அத்துமீறல் நடவடிக்கை கிள்ளான், ஜோஹான் செத்தியாவிலும் தொடரப்படுவதாக சுற்றுச் சூழலுக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.

“இந்த விவசாயிகள் பயிர்களை அறுவடை செய்த பின்னர் தோட்டத்தில் தீ மூட்டுகின்றனர். இதன் காரணமாக மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் தீச்சம்பவம் ஏற்படுகிறது” என்று இங்கு தீச்சம்பவம் ஏற்பட்ட இடத்திற்கு வருகை மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடத்தில் அவர் பேசினார்.

நேற்று முன் தினம் 75 விழுக்காடு தீ அணைக்கப்பட்டதாகவும் முழுமையாக சீரமைக்க ஏழு நாட்கள் பிடிக்கும் என்று லோய் சியான் விவரித்தார்.


Pengarang :