Anggota polis membuat sekatan jalan raya berikutan Perintah Kawalan Pergerakan bagi mengawal wabak Covid-19 di Lebuhraya Cheras – Kajang, Kajang pada 23 Mac 2020. Foto HAFIZ OTHMAN/SELANGORKINI
NATIONALSELANGOR

கடமையில் ஈடுபட்டுள்ள முன் வரிசை பணியாளர்களுக்கு நன்றி! – மந்திரி பெசார்

ஷா ஆலம், மார்ச் 26-

கோவிட் 19 வைரஸ் பரவலைத் தடுக்க அரசாங்கம் பிரகடணப் படுத்தியுள்ள நடமாட்ட கட்டுப்பாடு கால கட்டத்தில் கடமையில் ஈடுபட்டுள்ள முன் வரிசை பணியாளர்களுக்கு மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தனது நன்றியைப் பதிவு செய்து கொண்டார்.
டுவீட்டர் வழியாக வெளியிட்ட அறிக்கையில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அமிருடின் ஷாரி நன்றி தெரிவித்தார்.

மருத்துவப் பணி, பாதுகாப்பு நடவடிக்கை ஆகியவற்றோடு உணவுகளை விநியோகிக்கும் சேவையில் ஈடுப்பட்டுள்ள அனைவருக்கும் நன்றி என்றார் அவர்.
இதனிடையே கடந்த மார்ச் 20ஆம் தேதி மாநிலம் முழுவதிலும் பணியில் ஈடுபட்டுள்ள 6,000 மருத்துவத் துறை பணியாளர்களுக்கு தலா ரிம 200 உதவித் தொகை வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்தது.
இந்த உதவித் திட்டமானது கோவிட் 19 கால கட்டத்தில் விடுமுறை இல்லாமல் அயராது உழைத்து வரும் மருத்துவத் துறை பணியாளர்களை மாநில அரசு மதிப்பதை வெளிப்படுத்துகிறது என்ரார் அவர்.


Pengarang :