Dato’ Menteri Besar Selangor, Dato’ Seri Amirudin Shari menyampaikan sumbangan keperluan asas kepada golongan yang terkesan dengan Perintah Kawalan Pergerakan (PKP) di Dewan Serbaguna MPAJ AU5, Keramat pada 11, April 2020. Foto HAFIZ OTHMAN/SELANGORKINI
RENCANA PILIHANSELANGOR

மலேசியாவில் முதன் முதலாக சிலாங்கூரில் வீடு வீடாக கோவிட்-19 பரிசோதனை – மந்திரி பெசார்

உலு கிள்ளான், ஏப்ரல் 11:

சிலாங்கூர் மாநிலத்தில் கோவிட்-19 நோய் பரவலை தடுக்கும் நோக்கில் வீடு வீடாக பரிசோதனை நடவடிக்கையை இன்று சிலாங்கூர் மாநில அரசாங்கம் தொடங்கியது என மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். மலேசிய நாட்டில் முதல் முறையாக அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்தி இருப்பது சிலாங்கூர் மாநிலமே என்று அமிருடின் ஷாரி பெருமிதம் கொண்டார்.

முதல் நாளில் சுமார் 500 பேர்களை பரிசோதனை செய்ய முடியும் எனவும், ஆனால் எந்த இடங்களில் சோதனை நடத்தப்படும் மற்றும் அதன் முடிவுகள் அடுத்த 24 மணி நேரத்திற்குள் தெரியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

” மேற்கண்ட பரிசோதனை நடவடிக்கை மூலம் முடிவுகளை ஆய்வு செய்து நாம் செலவு செய்வது சரியானதுதானா அல்லது நடவடிக்கையை மறுபரிசீலனை செய்வதா என்பதை நாம் முடிவு செய்வோம்,” என்று லெம்பா கெராமாட் எம்பிஏஜே ஏயு5 பல்நோக்கு மண்டபத்தில் உலு கிள்ளான் சட்ட மன்ற தொகுதி மக்களுக்கு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் இவ்வாறு அமிருடின் ஷாரி பேசினார்.


Pengarang :