Petugas kesihatan menunjukkan sampel ujian Covid-19 yang dibuat melalui kaedah pandu lalu di Dewan Raja Muda Musa, Seksyen 7 pada 20 April lalu. Foto HAFIZ OTHMAN/SELANGORKINI
RENCANA PILIHANSELANGOR

சிலாங்கூரின் கோவிட்-19 தடுப்பு நடைமுறை நல்ல பயனளித்துள்ளது!

ஷா ஆலம், ஏப்.22-

சிலாங்கூரில் கோவிட்-19 பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டிய தரப்புகளை ஆய்வு செய்வதற்கு மாநில அரசு மேற்கொள்ளும் நடைமுறை நல்ல பயனை அளித்துள்ளது என்று சிலாங்கூர் கோவிட்-19 தொற்று தடுப்பு நடவடிக்கை பிரிவின் தலைவர் டாக்டர் சுல்கிப்ளி அகமது கூறினார்.
இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சுகாதார அமைச்சு மேற்கொள்ளும் நடைமுறைகளைத் தவிர்த்து சேகரிக்கப்பட்ட தரவுகளில் அடிப்படையில் புதிய சம்பவங்களை தேடும் நடைமுறை அமல்படுத்தப்படுவதாக அவர் சொன்னார்.

கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளிகளிடம் திரட்டப்படும் தகவல்கள் மற்றும் அபாயப் பகுதியாக அறிவிக்கப்படும் பகுதிகளில் திரட்டப்பட்ட பின்னர் தேர்ந்தெடுக்க தரவுகளை ஆய்வு செய்து பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய தரப்பின் மீது கவனம் செலுத்துவது அந்த நடைமுறைகளில் ஒன்றாகும் என்றார் அவர்..
நோயாளிகளின் வயது, ரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் புற்று நோய் கண்டவர்கள் மற்றும் சிறார்களும் பருவப் பெண்கள் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தி வருகிறோம் என்று அவர் சொன்னார்.
சேகரிக்கப்படும் தரவுகள் யாவும் மிகவும் முக்கியமாகும். அவற்றைக் கொண்டே சம்பந்தப்பட்ட பகுதிகளில் பெரிய அளவில் பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக முன்னாள் சுகாதார அமைச்சரான டாக்டர் சுல்கிப்ளி தெரிவித்தார்.


Pengarang :