Sekatan jalan raya dilakukan anggota Polis Diraja Malaysia (PDRM) bersama Tentera Udara Diraja Malaysia (TUDM) berikutan Perintah Kawalan Pergerakan di Seksyen 7, Shah Alam pada 10 April 2020. Foto ASRI SAPFIE/SELANGORKINI
NATIONALRENCANA PILIHAN

பிகேபி நான்காம் கட்டம்: வீட்டை விட்டு வெளியேறும் குடும்ப தலைவர்கள் இன்னொருவரை அழைத்துச் செல்லலாம்

புத்ராஜெயா, ஏப்ரல் 29:

நடமாடும் கட்டுப்பாடுஆணையின் (பிகேபி) நான்காம் கட்டம் இன்று தொடங்கிய நிலையில்  உணவு, மருந்து அல்லது அன்றாட தேவைக்கு பொருள்களை வாங்க வெளியே செல்ல அனுமதிக்கப்பட்ட குடும்பத் தலைவர்கள், இனி மற்றொரு குடும்ப உறுப்பினரையும் அவர்களுடன் அழைத்துச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இன்று தொடங்கி அடுத்த மே 12 வரை இந்த நடைமுறை அமுலில் இருக்கும். இருப்பினும்,  அவர்களுடன் வெளியே செல்லும் நபர் ஒரே இல்லத்தின் குடும்ப உறுப்பினராக இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

புதுப்பிக்கப்பட்ட விதியின் கீழ், பொதுமக்கள் வாங்கக்கூடிய பொருட்களின் பட்டியலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
முந்தைய விதி, மக்கள் “உணவு, மருந்து, உணவுப் பொருட்கள் அல்லது அன்றாட தேவைகளுக்கு” மட்டுமே தங்கள் வீட்டை விட்டு வெளியேற முடியும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Pengarang :