RENCANARENCANA PILIHANSELANGOR

கோவிட் -19க்குப் பின்னர் தொழிலாளர்கள் வாழ்க்கை மாற்றப் பிரச்னையை கையாள வேண்டும்!

மந்திரி பெசாரின் மே தின வாழ்த்து செய்தி

ஷா ஆலம், மே 1-

நாம் இப்போது 4ஆம் கட்ட நடமாட்ட கட்டுப்பாடு ஆணை காலத்தில் உள்ளோம். இஸ்லாமிய சமயத்தினரைப் பொறுத்த வரை இவர்கள்! வித்தியாசமான சூழலில் தங்கள் நோன்பு கடமையை நிறைவேற்றி வருகின்றனர். மீண்டும் நோன்பு மாதத்தை எதிர்கொள்வதற்கு அருள் புரிந்த இறைவனுக்கு நாம் நன்றி கூற வேண்டும் என்று மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

மலேசியா மட்டுமின்றி உலக முழுமையும் உள்ள முஸ்லிம் சகோதரர்கள் இந்த நோன்பு மாதத்தில் பெரும் சவாலை எதிர்நோக்கி வருகின்றனர் என்று மந்திரி பெசார் கூறினார். இக்காலத்தில் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை, மிகப் பெரிய அளவிலான நோன்பு துறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் அதிகமான மக்கள் கூடும் ரமலான் மாத சந்தைகளுக்கும் தடை விதிக்கப்பட்டது.

எனினும், நோன்பு காலத்தில் குடும்பத்தாருடன் அதிக நேரத்தைச் செலவழிப்பதற்கான வாய்ப்பை மக்கள் பெறுகின்றனர் என்று 2020 தொழிலாளர் தினத்தையொட்டி வழங்கிய வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார்.


Pengarang :