PBTSELANGOR

சட்ட விரோத தொழிற்சாலைகள் மூடப்படும்- ஆட்சிக்குழு உறுப்பினர் !!!

ஷா ஆலம், மே 9:

மாநிலத்தில் உரிமம் பெறாத அனைத்து தொழிற்சாலை உரிமையாளர்களும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்  அல்லது கடுமையான நடவடிக்கையை எதிர்கொள்ளுமாறு சிலாங்கூர் மாநில அரசாங்கம் எச்சரிக்கிறது. கோவிட் -19நோய் பரவலை கையாள்வதற்கான தேவை இருந்தபோதிலும் ஊராட்சி மன்ற அமலாக்க அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பார்கள் என்று ஊராட்சி மன்ற ஆட்சிக்குழு உறுப்பினர் எங் ஸீ ஹான் கூறினார்.

” இப்போது நிபந்தனைக்குட்பட்ட நடமாடும் கட்டுப்பாடு (பிகேபிபி) மற்றும் சிலாங்கூரில் மாற்றியமைக்கப்பட்ட பிகேபிபி ஆகிய நடவடிக்கைகள் அடுத்த கட்டத்துக்கு சென்றாலும் , பிளாஸ்டிக் கழிவு தொழிற்சாலை முன்பு போலவே தடைசெய்யப்பட்டுள்ளது. உரிமம் பெறாத தொழிற்சாலைகள், கட்டிடத் திட்டங்கள், திட்டமிடல் அனுமதிகள் , சுற்றுச்சூழல் இலாகா மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஆய்வு அறிக்கைகள் போன்ற அடிப்படை தகுதிகள் இல்லாத தொழிற்சாலைகள் மூடப்பட  வேண்டும்” என்று சிலாங்கூர் இன்றுக்கு  கூறினார்.

தங்கள் பகுதியில் சட்டவிரோத பிளாஸ்டிக் ஆலைகள் செயல்படுவதைக் கண்டால் உடனடியாக புகார் அளிக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டார். “பொதுமக்களின் வாழ்க்கையை பாதிக்கும் நடவடிக்கைகளை ஒழிப்பதில் ஊராட்சி மன்ற அதிகாரிகள் பொதுமக்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது” என்று அவர் மேலும் கூறினார். நேற்று, உலு சிலாங்கூர்  மாவட்ட மன்றம் (எம்டிஎச்எஸ்) ஒரு பிளாஸ்டிக் மறுசுழற்சி ஆலையை மூடும்படி கட்டளை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Pengarang :