沙白安南卫生局官员为小贩们进行新冠肺炎筛检。
PBTSELANGOR

எம்டிஎஸ்பி 336 பொதுச் சந்தை வணிகர்களுக்கு கோவிட்-19 பரிசோதனை !!!

ஷா ஆலம், மே 11:

கோவிட்-19 வைரஸ் நோய் பரவுவதைத் தடுக்க சபாக் பெர்னாம் மாவட்ட மன்றம்  (எம்டிஎஸ்பி) எட்டு பொதுச் சந்தைகளைச் சேர்ந்த 336 வர்த்தகர்கள் மீது பரிசோதனையை நடத்தியது. சம்பந்தப்பட்ட பொதுச் சந்தைகளின் வணிகர்களுக்கு தெரிவிக்கும் வகையில் ஒரு அறிக்கையை மாவட்ட மன்றம் வெளியிட்டுள்ளது. செகிஞ்சன், பசீர் பஞ்சாங், சுங்கை ஹாஜி டோரானி, சுங்கை பெசார், பிஎன்ஓ, சுங்கை தாவர் மற்றும் சபாக் மற்றும் செகிஞ்சன் மீன்பிடி ஜெட்டி ஆகிய பொதுச் சந்தைகள் இதில் சம்பந்தப்பட்டுள்ளது.

” இந்த பரிசோதனை ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும், ஏனெனில் பல புதிய சம்பவங்கள் செலாயாங் மொத்த சந்தையில் நிகழ்கின்றன. இதைத் தவிர சபாக் பெர்னாமில் உள்ள எல்லா பொதுச் சந்தை வியாபாரிகளுக்கும் கோவிட் -19 பரிசோதனை இலவசம் என்பதை உறுதிசெய்கிறது,” என்று எம்டிஎஸ்பி தனது முகநூலில் வழியாக கூறியது. ஸ்கிரீனிங் சோதனை சபாக் பெர்னம் மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் லிசா அப்துல் லத்தீப் தலைமையில் காலை 8 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடக்கிறது.

மாவட்ட சுகாதார மையம், சுகாதார மருத்துவமனை, காாவல்துறை , ரேலா மற்றும் நிலம் மற்றும் நில அலுவலகம் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் இந்த சோதனையில் உதவுவதில் ஈடுபடுவார்கள். முன்னதாக, செலாயாங்கில் உள்ள கோலாலம்பூர் மொத்த சந்தையைச் சுற்றியுள்ள பகுதியை நிபந்தனைக்குட்பட்ட  நடமாடும் கட்டுப்பாட்டு (பிகேபிடி) ஆணைக்கு உட்படுத்துவதாக அரசாங்கம் அறிவித்திருந்தது.


Pengarang :