Lebuhraya Persekutuan dipenuhi kenderaan di kedua-dua arah pada waktu petang ketika tinjauan pada 5 Mei 2020. Foto ASRI SAPFIE/SELANGORKINI
NATIONALRENCANA PILIHAN

மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் பயணிகளுக்கு நிபந்தனைகளில் தளர்வு இல்லை- இஸ்மாயில் சப்ரி

ஷா ஆலம், மே 5:

கிராமத்தில் உள்ள மக்கள் மாநிலம் விட்டு மாநிலம் தாண்டி, தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதற்கு தளர்வு இல்லை என்று மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) தெரிவித்தார். கெராக் மலேசியா விண்ணப்பத்தின் மூலம் அவ்வாறு செய்ய அனுமதி அளிக்கப்பட்ட பின்னர் இது நடந்ததாக டத்தோ ஸ்ரீ  இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார். இருப்பினும், மரணம் போன்ற அவசரநிலை ஏற்பட்டால், அது காவல்துறை ஒப்புதல் அளித்தப்பின் மாநிலம் விட்டு மாநிலம் செல்ல இயலும் என்று அவர் இன்று புத்ராஜெயாவில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

கெராக் மலேசியா விண்ணப்பம் மற்றும் காவல்துறை கையேடு படிவத்தின் மூலம் மொத்தம் 401,253 விண்ணப்பங்களுக்கு காவல்துறை ஒப்புதல் அளித்ததாக (நான்கு நாள் மாநில எல்லை தாண்டிய ஒப்புதல்)  இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார். ” நேற்று, கெராக் மலேசியா விண்ணப்பத்தின் மூலம் 109.300 அனுமதி வழங்கப்பட்டது, சிலாங்கூர், நெகிரி செம்பிலன் மற்றும் தெரெங்கானு ஆகிய இடங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்கள் வீடுகளுக்குத் திரும்ப 1,388 காவல்துறை  கையேடு படிவங்கள் வழங்கப்பட்டன. காவல்துறையினரின் அறிக்கையின்படி, மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் இயக்கம் சீராக இருந்தது, போக்குவரத்து சீராக இருந்தது, நெரிசல் இல்லை, ஓய்வெடுக்கும் மையத்தில் நிலைமை கூட சீராக இருந்தது” என்று அவர் கூறினார்.


Pengarang :