KUALA LUMPUR, 13 Mei — Sampel yang diambil daripada individu kemudian akan dihantar bagi mendapatkan keputusan ujian saringan COVID-19 sebelum bermulanya persidangan Dewan Rakyat yang dijadualkan bermula pada 18 Mei ini di Bangunan Parlimen hari ini. –fotoBERNAMA (2020) HAK CIPTA TERPELIHARA
NATIONALRENCANA PILIHAN

கோவிட்-19: 37 புதிய சம்பவங்கள், அதில் 21 அந்நியர்கள் !!!

புத்ராஜெயா, மே 13:

நம் நாட்டில் இன்று வரை கொவிட்-19 நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 6,779 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதியதாக 37 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. பிகேபி நடவடிக்கை தொடங்கியது முதல் இதுவே மிகக் குறைந்த சம்பவங்களை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் 21 நோயாளிகள் வெளிநாட்டினர் எனவும் 16 உள்நாட்டினர் ஆகும். இன்று இரண்டு  மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரையிலான மரண எண்ணிக்கை 111-ஆகவே உள்ளது என சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா விளக்கினார்.

இன்றைய  நிலையில் 16 பேர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருக்கின்றனர். இவர்களில் 4 பேர்கள் சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இன்று 58 பேர்கள் சிகிச்சையிலிருந்து குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். இதைத் தொடர்ந்து இதுவரையில் கொவிட்-19 பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,281 உயர்ந்திருக்கிறது. ஆசியான் வட்டாரத்திலே மிக அதிகமாக குணமடைந்தவர்கள் அதாவது 77.9 % இன்று பதிவு செய்யப்பட்டுள்ளது என்று நூர் ஹிஸாம் கூறினார்.


Pengarang :